ஷாரிஸாட் திரும்பி வரப்போவதில்லை, கிட் சியாங்

தற்போது மூன்று வார விடுப்பில் சென்றிருக்கும் அம்னோ மகளிர் பிரிவு தலைவர் ஷாரிஸாட் அப்துல் ஜாஜில் மீண்டும் வேலைக்குத் திரும்புவார் என்று மலேசியர்கள் எதிர்பார்க்கலாகாது என்று மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.

சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் என்எப்சி விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை தொடங்கியதும் அவர் தானாகவே அவ்வாறு செய்திருக்க வேண்டும். இப்போது அவர் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்.

“அவரது விடுப்பு பெப்ரவரி 3, 2012 இல் முடிவுறும் போது ஷாரிஸாட் அமைச்சரவைக்கோ நாடாளுமன்றத்திற்கோ திரும்புவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை”, என்றார் அவர்.

TAGS: