ஆசிரியர்களை நியமிக்கும் போது பாலியல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக காவல்துறையின் உதவியைப் பெறுவது குறித்து JAIS பரிசீலித்து வருகிறது.

புதிய ஆசிரியர் தேர்வு/சோதனை முறையின் ஒரு பகுதியாக இது இருக்கும் என்றும், அந்தப் புதிய முறையை நடைமுறைப்படுத்த தாங்கள் நம்புவதாகவும் சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறைத் தலைவர் தெரிவித்தார்

ஜெயிஸ் (The Selangor Islamic religious department) இயக்குநர் ஷாஹிஜான் அஹ்மத், பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார். மேலும், இந்தப் பாதுகாப்பு சோதனையை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து காவல்துறையுடன் கலந்தாலோசிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பாலியல் குற்றங்கள் தொடர்பான முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், சமயப் பள்ளிகளில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறையின் ஒரு பகுதியாக காவல்துறை அனுமதிச் சான்றிதழை (Police Clearance) பெறுவது குறித்து சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (JAIS) பரிசீலித்து வருகிறது.

JAIS இயக்குநர் ஷாஹிசான் அஹ்மத் கூறுகையில், புதிய கடுமையான ஆசிரியர் தேர்வு முறையின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படலாம் என பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“அனைத்து ஆசிரியர்களும் காவல்துறை அனுமதிச் சான்றிதழைப் பெற வேண்டும் என்று நாங்கள் கோருவதற்கான வாய்ப்பு உள்ளது”.

“பாதுகாப்புத் தணிக்கை அவசியம். இந்தத் தணிக்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து காவல்துறையுடன் கலந்தாலோசிப்போம்,”

என்று இன்று ஷா ஆலம் நகரில் வெளிநாடுகளுக்கு (மத்திய கிழக்கு நாடுகள்) செல்லவுள்ள மாணவர்களுக்கான மாநில அளவிலான தயாரிப்புப் பயிற்சியின் நிறைவு விழாவுக்குப் பின்னர் அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து பள்ளிப் பதிவு குழுவுடன் தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக ஷாஹிசான் தெரிவித்தார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையிலான தொடர்புகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், இந்த விவகாரத்தை சமாளிக்க மேலும் கடுமையான பிரிப்பு நடைமுறைகள் முன்மொழியப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் பிற மாணவர்கள் தவிர்க்க வேண்டிய செயல்களைச் செய்யக்கூடாது. உதாரணமாக, ஒருவருக்கு சிறப்புச் சலுகை வழங்குதல் அல்லது வழக்கத்திற்கு மாறான நேரங்களில் சந்தித்தல் போன்றவை கூடாது.

“மேற்பார்வை இல்லாத நேரங்களில் அல்லது அமைதியான நேரங்களில் கூட்டங்கள் அல்லது மனப்பாடப் பயிற்சி அமர்வுகளை நடத்தக்கூடாது,”

என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, சமயப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையை, மாநில அரசு காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.