கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்; மூவர் பலி!

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள நியூ மேகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தபட்சம் 31 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் துப்பாக்கி குண்டுகளாலேயே காயமடைந்துள்ளனர். கலவரத்தில் 3 கைதிகள் பலியாகிவிட்டதாக கைதி ஒருவர் கூறினார்.

கலவரத்தின்போது சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தேவைப்பட்ட தரத்தை விட குறைவாக இருப்பதாக கூறிய சிறைச்சாலை துறையின் தலைவர், சிறைச்சாலையின் நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் மேலும் சொன்னார்.

கலவரத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். 26 கைதிகளுக்கும், 5 அதிகாரிகளுக்கும் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறைவாசிகளுக்கு பெரும்பாலும் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட காயமே உள்ளது, இதில் பெரும்பான்மையான காயம் முட்டிக்கு கீழேயே உள்ளது. என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியாமல் உள்ளது.

புதியதாக கொண்டு வரப்பட்ட வரைமுறைகளை எதிர்த்து சிறைவாசிகள் கலவரம் நடத்தியதாகவும், இதனை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையின் சார்பில் பேசவல்லவரான அஜித் ரோஹானா தெரிவித்தார்.

TAGS: