இலங்கை அரசுக்கு சோமாலிய கடற்கொள்ளையர்கள் மிரட்டல்

தமிழக மீனவர்களை தொடந்து சிறைபிடித்து துன்புறுத்தி வரும் இலங்கை கடற்படையினருக்கும் பெருந்தலைவலியாக மாறியுள்ளது சோமாலிய கடற்கொள்ளையர்கள் விவகாரம்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க சோமாலிய கடற்கொள்ளையர்கள் 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை கேட்பதாக கடத்தப்பட்ட இலங்கை மீனவர்களின் குடும்பத்தினர் இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜித சேனரத்னே உறுதிசெய்துள்ளார். ஆனால், சோமாலிய அரசிடம், மீனவர்கள் விடுவிப்பு குறித்து உறுதியான தகவல் தங்களுக்கு இதுவரை வரவில்லை என்று கூறியுள்ளார்.

TAGS: