“நஜிப் மிதவாதம் குறித்து தவறான மரத்தைப் பார்த்துக் குரைக்கிறார்”

“சீனர்கள் அதிகமாக உள்ள கூட்டத்தைப் பார்த்து மிதவாதமாக இருக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொள்கிறார். அவர் அதனை அம்னோ, பெர்க்காசா, பெர்க்கிடா ஆகியவற்றிடம் சொல்ல வேண்டும்.”

நஜிப் மிதவாதப் போக்கைப் பின்பற்றுங்கள் என சாப் கோ மே கூட்டத்தினரிடம் சொல்கிறார்

அடையாளம் இல்லாதவன்_4031: சாப் கோ மே கொண்டாட்டத்தின் போது மிதவாதப் போக்கைக் கடைப்பிடிக்குமாறு சீனர்களிடம் சொல்கிறார். அன்புள்ள பிரதமர் அவர்களே, நீங்கள் தவறான மரத்தைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தியர்களை போன்று சீனர்களும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மிதவாதிகளாக இருந்து வந்துள்ளனர்.

மிதவாதியாக இருக்குமாறு நீங்கள் அம்னோவின் குரலான உத்துசான் மலேசியாவிடம் சொல்ல வேண்டும். இன வாத அரசு சாரா அமைப்பான பெர்க்காசாவிடம் நீங்கள் கூற வேண்டும்.

பள்ளிக்கூடங்களில் உள்ள தலைமையாசிரியர்களிடம் மிதவாதப் போக்கை பின்பற்றுமாறு சொல்லுங்கள். அம்னோவுக்கு சார்பாக இயங்கும் உங்கள் அரசாங்க ஊழியர்களிடம் மிதவாதிகளாக இருக்குமாறு கூறுங்கள்.

மிதமான போக்கு தேவை என உங்கள் போலீசிடமும் கலகத் தடுப்புப் போலீஸிடமும் சொல்லுங்கள். பெர்சே ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளையும் இரசாயனம் கலந்த நீரையும் பாய்ச்ச வேண்டாம் எனச் சொல்லுங்கள்.

தியோ பெங் ஹாக் போன்ற சாட்சிகளை விசாரிக்கும் போது மிதவாதத்துடன் நடந்து கொள்ளுமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அறிவுறுத்துங்கள்.

பிரதமர் அவர்களே, மிதவாதத்துடன் இருக்குமாறு நீங்கள் உங்களுக்கே சொல்லிக் கொள்ள வேண்டும். “நமது சடலங்கள் நசுக்கப்பட்டாலும் நமது உயிர்கள் இழக்கப்பட்டாலும் நாம் என்ன விலை கொடுத்தாவது புத்ராஜெயாவை தற்காக்க வேண்டும்,” எனச் சொல்லி மக்களை மருட்ட வேண்டாம்.

முரசு: நஜிப் “மிதவாதத்தை” எப்படி வரையறுக்கிறார்? பெர்க்காசா போன்ற அதிதீவிரவாத அமைப்புக்களை அனுமதித்து விட்டு அவற்றுக்கு மறைமுகமான ஆதரவை வழங்குவதுதான் “மிதவாதத்துக்கு”‘ அர்த்தமா? அப்படி என்றால் அந்த மிதவாதத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அது எங்களுக்கு வேண்டாம்.

சொந்த ஆதாயத்துக்காக அதிகார அத்துமீறல்களையும் மிதமிஞ்சிய நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்வதுதான் “மிதவாதம்” என்றால் அதனை குப்பையில் போடுங்கள். காரணம் நாங்கள் அதனை முற்றாக வெறுக்கிறோம்.

தேர்தலில் மோசடி செய்வது, சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் உபகாரச் சம்பளங்களை மறுப்பது, சபா, சரவாக் சுதேசிகளின் நில உரிமைகளைப் பறிப்பதுதான் “மிதவாதம்”‘ என்றால் அந்த அலங்காரமான பேச்சுக்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
 
இது எல்லாம் வெறும் தேர்தல் பேச்சு என்பது எங்களுக்கு நன்கு தெரியும். பொதுத் தேர்தல் முடிந்து நீங்கள் வெற்றி பெற்று விட்டால் அந்த மிதவாதம் தூக்கியெறியப்படும். அத்துமீறல்கள் அதிகமாகும். மலாய்க்காரர் அல்லாதாரை  ஒரங்கட்டுவது துரிதமடையும். அந்தக் கபட நாடகத்தை இரட்டை வேடத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

பேப்பர் ரோஸ்: மிதவாதியாக இருக்குமாறு மகாதீரிடம், இப்ராஹிம் அலியிடம் ஹசான் அலியிடம் சொல்லுங்கள். சீனர்களிடம் அல்ல.

சாடிரா: இப்போது “மிதவாதம்”. அது ஏற்கனவே “நிலைத்தன்மையாக” இருந்தது. நம்மிடையே தீவிரவாதிகள் இருப்பதால்தான் நமக்கு மிதவாதம் தேவை, நஜிப் அவர்களே. அவர்களுக்கு எதிரான நிலையை நீங்கள் கடைப்பிடிக்கவே இல்லை. உங்கள் தார்மீகப் பண்புகள் எங்கே போயின?

பல இனம்: சீனர்கள் அதிகமாக உள்ள கூட்டத்தைப் பார்த்து மிதவாதமாக இருக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொள்கிறார். ஆனால் அவர் அதனை அம்னோ, பெர்க்காசா, பெர்க்கிடா ஆகியவற்றிடம் சொல்ல வேண்டும்.

ஒங்: ஜெஞ்சாரோம் கிராம மக்கள் எண்ணிக்கை எனக்குத் தெரியாது. ஆனால் 2008 தேர்தல் புள்ளி விவரத்தின் படி 66,515 வாக்காளர்களைக் கொண்ட கோலா லங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் ஜெஞ்சாரோம் உள்ளது.

அதன் கீழ் சிஜங்காங், தெலுக் டத்தோ, மோரிப் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. அதில் மோரிப்பில் பிஎன் வென்றது. பக்காத்தான் ராக்யாட் மற்ற இரண்டு இடங்களையும் பிடித்தது.

தெலுக் டத்தோ தவிர மற்ற இடங்களுக்கான வேட்பாளர்கள் அனைவரும் மலாய்க்காரர்கள். அதனால் மக்கள் தொகையில் மலாய்க்காரர்கள் அதிகம் எனப் பொருள்படும்.

அந்த பிஎன் ஏற்பாடு செய்த கொண்டாட்டங்களில் “பெரும்பாலும் சீனர்களாக இருந்த 50,000 பேர் கலந்து கொண்டதாக” நிருபர் கூறுகிறார். அந்த 50,000 என்பது சரியான தகவல் என்றால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

அவர்கள் அனைவரும் கோலா லங்காட்டைச் சார்ந்திருந்து நஜிப்பையும் பிஎன்- னையும் ஆதரிக்க முடிவு செய்தால் அடுத்த தேர்தலில் பிஎன் நிச்சயம் கோலா லங்காட் நாடாளுமன்றத் தொகுதியையும் மூன்று சட்ட மன்றத் தொகுதிகளையும் வென்று விடும்.

அந்த Dong Zen Fo Guang Shan பௌத்த ஆலயத்துக்கு வழக்கமாக சுற்றுப் பயணிகள் நிறைய வருவது வழக்கம். அதனால் அவர்கள் பிஎன் கொண்டு வந்த சுற்றுப்பயணிகளாகவும் இருக்கலாம்.

ரிக் தியோ: ஹாஹாஹா, நாங்கள் அனைவரும் தைவான் கலைஞர்களையும் அவர்களது படைப்புக்களையும் காண அங்கு சென்றிருந்தோம். பிரதமர் என்ன சொல்கிறார் என்பதை நாங்கள் காது கொடுத்து கேட்கவே இல்லை.
 
சாப் கோ மே-யைக் கொண்டாடவும் பிரார்த்தனை செய்யவும் பக்தர்கள் ஜெஞ்சாரோம் சென்றனர். மிதவாதம் பற்றி பிரதமர் நமக்கு விரிவுரை நிகழ்த்துவதைக் கேட்பதற்கு அல்ல. அவர் மிதவாதம் பற்றி பெர்க்காசா, ஜாத்தி ஆகியவற்றுக்கு அறிவுறுத்த வேண்டும். தீவிரவாதத்தில் ஈடுபடாத சீனர்களிடம் அல்ல.

வெறுப்படைந்த மலேசியன்: வெளிநாடுகளில் பொருட்களை வாங்கும் போது மிதவாதமாக நடந்து கொள்ளுமாறு பிரதமர் தமது துணைவியார் ரோஸ்மா மான்சோருக்கு அறிவுரை கூற வேண்டும்.