புலிகளின் வைப்பகம் திறம்பட இயங்கியது: அமெரிக்க தூதுவர்

இலங்கையின் வடகிழக்கு நிலப்பரப்பு விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்தவேளை அவர்களால் நிறுவப்பட்ட தமிழீழ வைப்பகம் (BANK) திறம்பட செயல்பட்டதாக இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் தமது தலைமைக்கு தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பல நாடுகள் தடைசெய்த காரணத்தால் அவர்களுக்காக புலம்பெயர் தேசங்களில் தமிழர்களால் சேகரிக்கப்பட்ட நிதி அவர்களுக்குச் சென்றடைவதில் பெரும் சிரமம் காணப்பட்டதாகவும், இதனை ஈடுசெய்யவே புலிகள் நிதித்துறையை ஒன்றை நிறுவியதாகவும் அமெரிக்கத் தூதர் விபரித்துள்ளார். இதன் காரணமாகவே விடுதலைப் புலிகள் வரி அறிவிடும் கட்டமைப்பையும் சுங்க வரி மற்றும் தமிழீழ வைப்பகங்ளை நிறுவியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காசோலைகளுடன் கூடிய கணக்குகளை வாடிக்கையாளர்கள் திறக்க ஏதுவாக தமிழீழ வைப்பகங்கள் இயங்கியதாக குறிப்பிட்ட அவர் உலகில் தடைசெய்யப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பு வைப்பகமொன்றை நிர்வகிப்பது இதுவே முதல்தடவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

தமிழீழ வைப்பகங்கள், இலங்கை அரசின் வைப்பகங்களை விட மிகவும் நேர்மையாகவும் நேர்த்தியாகவும் நிர்வகிப்பட்டதாக அமெரிக்க தூதர் தனது தலைமைக்கு அனுப்பிவைத்துள்ள இரகசிய  மின்னியல் தந்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGS: