ஐரோப்பாவின் ஒசாமா பிணையில் விடுதலை!

பிரிட்டிஷ்-ல் சிறை வைக்கப்பட்டிருந்த பயங்கரவாதியான ஐரோப்பாவின் ஒசாமா கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதியான அபு கொத்தடா (வயது 51) ஐரோப்பாவின் ஒசாமா என அழைக்கப்படுகிறார்.

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக சிறையில் இருந்த அவரின் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து நீதிமன்றம் ஆதாரமற்ற விசாரணையில் அபுவுக்கு 6.5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை காரணம் காட்டி கடுமையான நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது.

இதன் படி கைபேசி அல்லது இணையத்தள பயன்பாடு, மசூதி செல்லுதல், ஒருமணி நேரத்திற்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதித்தல் உட்பட எந்தவித அறிக்கையும் வெளியிடக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளது.