ஜெனிவாவில் சிரியாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது! அடுத்தது சிறீலங்கா?

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரில் சிரியா விவகாரம் முக்கிய விடயமாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற அமர்வின் போது சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானமொன்று அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிரிய அரசுத் தலைவர் பஸார் அல்-அஸாட் தலைமையிலான சிரியா அரசாங்க நிர்வாகத்தின் கீழ் அதிகரித்துச் செல்லும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட சிரியாவுக்கு எதிரான இந்த கண்டன தீர்மானத்தை ஆதரித்து 37 நாடுகள் வாக்களித்ததுடன் ரஷ்யா, சீனா, கியூபா ஆகிய மூன்று நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட மூன்று நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

சிரியா ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல் தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அடுத்து சிறீலங்காவை நோக்கிய தீர்மானம் அவைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் மேலோங்கியுள்ளது.

TAGS: