மொட்டையடித்து தெருவில் ஊர்வலம்; பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

கிறிஸ்துவப் பெண் ஒருவர் கடுமையாக அடித்துத் துன்புறுத்தப்பட்டு, மொட்டையடிக்கப்பட்டு, தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடந்துள்ளது.

லாகூரில் இருந்து, 80 கி.மீ., தொலைவில் உள்ள சியால்கோட் மாவட்டத்தில், கோட் மீரட் கிராமத்தை சேர்ந்த 30 பேர், சீமா பீபி என்ற பெண்ணை, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, அவரது வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து கடுமையாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அதோடு, அவரது தலையை மொட்டையடித்து, தெருக்களில் இழுத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து, அங்குள்ள கிறிஸ்துவர்கள் சிலர் கூறுகையில், “அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும், கடந்த சில நாட்களாகவே சிலரிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளது. தற்போது, அவர் கிராமத்தை விட்டுச் சென்று விட்டார்’ என்றார்.

சீமா பீபியின் மத நம்பிக்கை காரணமாக, அவரை அடித்துத் துன்புறுத்தியவர்களில், 26 பேரை கைது செய்ததாகக் கூறிய, மண்டல காவல்துறை அதிகாரி முகமது அமின், சீமாவும் அவரது குடும்பத்தாரும், தற்போது எங்கிருக்கின்றனர் என்பது தெரியவில்லை எனக் கூறினார்.