சிறீலங்காவில் பதுங்கியுள்ள அமெரிக்காவின் சிறப்புப் படைகள்

அமெரிக்க விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த துருப்பினர் இலங்கை உள்ளிட்ட தென் ஆசிய வலய நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகக் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் மேலும் மூன்று தென் ஆசிய நாடுகளில் அமெரிக்கத் துருப்பினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்பு ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு அமெரிக்கப் படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக ஆசிய பசுபிக்குக்கு பொறுப்பான கட்டளைத் தளபதி அட்மிரால் ராபட் வில்லார்ட் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கி வரும் லக்ஸர்-ஈ-தொய்பா அமைப்பு மிகவும் ஆபத்தான தீவிரவாத இயக்கம் என குறிப்பிட்ட அவர் பயங்கரவாத ஒழிப்பு குறித்து இந்தியாவுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் விசேட படைப் பிரிவுகள் இலங்கையில் நிலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அமெரிக்கத் துருப்பினர் இலங்கையில் நிலை கொண்டிருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

TAGS: