ஐ.நாவில் இலங்கையை ஆதரிக்க கூடாதென போராட்டம்!

இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிடவேண்டும், தமிழர்களின் உரிமைகளும் வாழ்வாதாரங்களும் பாதுகாக்கப்படவேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் இலங்கைத் துணைத் தூதரகம் அருகே நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருவதைவிட அதிகளவான நடவடிக்கைகள் தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. இராமகிருஷ்ணன் கூறினார்.

சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தி.மு.க தலைவர் கருணாநிதியும் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கக்கூடாது என்று கோரியிருக்கின்றனர்.

தமிழகத்தில் காங்கிரசைத் தவிர்த்து மற்ற பல கட்சிகள் இலங்கையைக் கண்டித்தும் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என வற்புறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

TAGS: