சிரியாவில் இராணுவத் தலையீடு கூடாது என்கிறார் கோபி அனான்

சிரியாவில் எந்தவொரு வெளிநாட்டு இராணுவ தலையீடும் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று சிரியாவுக்கான ஐ.நா மற்றும் அரபு லீக்கின் சிறப்புத் தூதுவரான கோபி அனான் அவர்கள் எச்சரித்திருக்கிறார்.

இராணுவத்தை அங்கு பயன்படுத்துவது குறித்து எவரும் தீவிரமாக யோசிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

டமாஸ்கசுக்கான தனது பயணத்திற்கான திட்டம் குறித்து பேசிய அவர், சிரியாவின் நெருக்கடி அரசியல் ரீதியாக மாத்திரமே தீர்த்து வைக்கப்பட முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிரிய மக்களின் எதிர்பார்ப்புக்கு மரியாதை கொடுக்கும் வகையிலான தீர்வு ஒன்று குறித்து ஆராயுமாறு சிரியாவின் அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் அவர் கேட்டிருக்கிறார்.