ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுபட்டிருந்த, நேட்டோ வானூர்தி கீழே விழுந்து நொறுங்கியதில், 15 பேர் பலியாயினர்.

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் சார்பில், துருக்கி நாட்டு வானூர்தி மனிதாபிமான உதவிகள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தன. காபூலில், இந்த வானூர்தி தரையிறங்க முற்பட்டபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் வானூர்தியில் இருந்த, 12 இராணுவ வீரர்களும் தரையில் இருந்த ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளும் பலியாயினர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் சார்பில் ஈடுபட்டுள்ள, ஒரே முஸ்லிம் நாடு துருக்கி தான். 1,800 துருக்கி வீரர்கள் இங்கு மனிதாபிமான உதவிகள் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடவில்லை.