அண்மையில் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள், நோர்வே நாட்டு அமைச்சர்கள் சிலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
நோர்வே நாட்டின் அபிவிருத்தி மற்றும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எரிக் சொல்கைம், அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் ஏனா சொல்பேர்க், மற்றும் பாதுகாப்புப் அமைச்சில் உள்ள சில துணை அமைச்சர்கள் சிலரையும் தாம் சந்தித்ததாக உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
உலகத் தமிழர் பேரவை பல நாட்டுத் தலைவர்களையும் அமைச்சர்களையும் அண்மைக் காலமாக சந்தித்து வரும் நிலையில், இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் மலேசியத் தமிழர் பேரவையின் தலைவர் டாக்டர் ஐங்கரன் உட்பட தமிழர் பேரவையின் பன்னாட்டு பிரதிநிதிகள் சிலர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.நாவின் மனித உரிமை மன்றத்தில் 47 வது உறுப்பு நாடாக நோர்வே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கத.