வரும் 2015-ஆம் ஆண்டில் அமெரி்க்க நிறுவனத்தின் துணையுடன் வங்க தேசம் தன்னுடைய முதல் செயற்கை கோளை விண்ணில் செலுத்த உள்ளது. வங்க தேச டெலிகம்யூனிகேசன் ஒழுங்குமுறை ஆணையம் முதல் கட்டமாக 10 மில்லியன் டாலர் மதிப்பில் அனைத்துலக ஒப்பந்தம் செய்யஉள்ளது.
இது குறித்து ஸ்பேஸ் பாட்னர்ஷி்ப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர் புருஸ் டி.கர்லெஸ்கி கூறுகையில்; அமெரிக்காவின் மேரிலேண்ட் நிறுவனத்துடன் இணைந்து செயற்கைகோள் தயாரிக்கப்பட உள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் 150 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயற்கை கோள் வங்கதேசத்தின் தொலை தொடர்புதுறை மேம்படு்த்தும் வகையிலும், பேரிடர் முன்னெச்சரிக்கையை அறிவதற்கும் பயன்படுத்தப்படும் என தெரிவி்ததுள்ளது.
மேற்கண்ட வசதிகளுக்காக வங்கதேசம் வெளிநாட்டு செயற்கைகோள்களுக்காக ஆண்டு தோறும் சுமார் 11 மில்லியன் டாலர் வரை வாடகையாக செலுத்தி வருகிறது.