“நஜிப் பதில் இப்படித்தான் இருக்கும் என் ஆரூடம்: “அங்கீகரிக்கப்படாத இணையத் தளங்களிலிருந்து கிடைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. அந்த விவகாரம் மூடப்படுகிறது.”
வெட்டுமர ஊழல் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்கிறார் அனீபா
அடையாளம் இல்லாதவன் #88568176: “எந்தத் திருடனும் தான் திருடியதை ஒப்புக் கொள்ளவே மாட்டான்” என்பது முதுமொழியாகும்.
இந்த காலத்தில் ரகசியங்களை பூட்டி வைப்பது என்பது எளிதான காரியமல்ல. அரசாங்கச் சேவையிலும் அமலாக்க அமைப்புக்களிலும் பணியாற்றும் மலாய்க்காரர்களிடையே உள்ள விவேகமானவர்கள் தொடர்ந்து அம்னோவுக்கும் திருடும் அதன் தோழர்களுக்கும் தொடர்ந்து பயங்கரக் கனவுகளைக் காண வைத்து விடுவர். அந்த அமைப்புக்களில் உள்ள தகவல் கொடுப்போரை பழி வாங்கும் நடவடிக்கையை அம்னோ விரைவில் தொடங்கினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
என் சக மலேசியர்களே, நீங்கள் எங்கு இருந்தாலும் மக்களுக்கு நீதி வழங்கும் உங்கள் சிறந்த பணியைத் தொடருங்கள்.
அடையாளம் இல்லாதவன்#00470101: சரவாக் ரிப்போர்ட் இவ்வாறு கூறுகிறது: மலாயா பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் வெறும் மூன்றாவது நிலையில் தேர்ச்சி பெற்ற அப்துல் கனி பட்டெய்ல் (சட்டத் துறைத் தலைவர்), நாட்டின் சிறந்த சட்ட நிபுணராக ஒரு போதும் கருதப்பட்டதில்லை. ஆனால் அவர் நீதித் துறையில் மிக உயர்ந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.”
“எதிர்ப்பாளர்கள் அவரை பிஎன் ‘ஆமாம் மனிதர்’ என்றே கருதுகின்றனர். ஊழல் மலிந்த அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் பொருட்டு அவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
“சட்ட விரோதமாக மூலதனம் வெளியேறும் நாடுகள் பட்டியலில் மலேசியா உயர்ந்த இடத்தில் இருக்கும் வேளையில் உயர் நிலையிலான ஊழல் புலானய்வுகளை தொடர கனி மறுத்துள்ளதின் மூலம் பிஎன் அரசியல்வாதிகள் நாட்டின் செல்வத்தைத் தங்கு தடையின்றி உறிஞ்சுவதற்கு அனுமதித்துள்ளார்.”
வேட்டைக்காரன்: கடைசியாக கனி பட்டெய்ல் கழுத்தைக் கயிறு இறுக்குகிறது. பிரதமர் நஜிப் ரசாக் ஒன்றும் செய்ய மாட்டார். செய்யவும் முடியாது. இந்த அமான் ஊழல் அவரது வாட்டர்லூ-வாக இருக்கும்.
பால் வாரென்: அனீபா அவர்களே, உங்கள் பதில் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட ஊழல் முதலில் அம்பலப்படுத்தப்பட்ட போது அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் அளித்த பதிலைப் போன்று உள்ளது.
உங்களுக்கு என்னுடைய இலவச ஆலோசனை: ஆம் என்று சொல்லி, வெட்டுமர சலுகைக்கு விண்ணப்பித்ததை ஒப்புக் கொண்டு மாநில அரசுக்கு சிறந்த பேரத்தை வழங்கியதால் அந்தச் சலுகை தனக்குக் கிடைத்தது என்றும் சொல்லுங்கள். அடுத்து நீங்கள் கோல் கம்பத்தை ஒரளவு இடம் மாற்றிக் கொள்ளலாம்.
வாழை: அனீபா, நீங்கள் சொல்வதை யாராவது நம்புவர் என நீங்கள் எண்ணுகின்றீர்களா? புழுக்கள் நிறைந்த தகரக் கலம் திறக்கப்பட்டு விட்டது.