45 ஆயிரம் விதவைகளை பார்த்து கண்ணீர் வடித்தோம்: இந்திய எம்.பி

“மட்டக்களப்பு பகுதியில், 45 ஆயிரம் விதவைகளைப் பார்த்து, சுஷ்மா சுவராஜ் உட்பட அனைத்து எம்.பி.,க்களும் கண்ணீர் வடித்தோம்” என, இலங்கை சென்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்.பி., டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்.

இந்திய எம்.பி.,க்கள் குழு இலங்கையில் தமிழ் மக்களை தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து பேச வாய்ப்புக் கிடைத்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோடும், வேறு சில தமிழர் அமைப்புகளோடும் விவாதித்தோம். அவர்கள், ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் கூடுதல் அரசியல் அதிகாரம் வேண்டும் என வலியுறுத்தினர்.

“யாழ்ப்பாணம் முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாணிக்கம் தோட்டம், செட்டிக்குளம் பகுதிகளில் தமிழ் மக்களோடு கலந்து பேசினோம். மட்டக்களப்பு பகுதியில், 45 ஆயிரம் தமிழ் போர் விதவைகளைப் பார்த்தோம். அவர்களில், 13 ஆயிரம் பேர், 23 வயதுக்கு உட்பட்ட பெண்கள். இவர்களைப் பார்த்து நான் மட்டுமல்ல, சுஷ்மா சுவராஜ் உட்பட அனைவரும் கண்ணீர் விட்டோம். யாழ்ப்பாணம் பகுதியில் கோவில்களில் இராணுவம் வாபஸ் பெற வேண்டும் என, ராஜபக்ஷேவிடம் வலியுறுத்தினோம். கல்வி, குடியிருப்பு, பொருளாதார முன்னேற்றம் என இன்னும் பல குறைகள் அங்கு உள்ளன” இவ்வாறு அவர் கூறினார்.

TAGS: