விடுதலைப் புலிகளைப் பிடிக்க சிங்கள இராணுவம் வேட்டை

இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்போரில் விடுதலைப் புலிகளை முற்றிலும் அழித்து விட்டதாக இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சே அறிவித்தார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஐலன்ட்  என்ற நாளிதழில் விடுதலைப்புலிகள் ஊடுருவியதாக தகவல்கள் வெளியானது. இதை சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் மறுத்தனர். இந்நிலையில் இலங்கையின் கிழக்கு மாநிலப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் இருப்பதாக சிங்கள இராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிங்கள இராணு வீரர்கள் கிழக்கு மாநிலத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் விடுதலைப் புலிகள் பதுங்கி இருக்கிறார்களா? என்று தேடுதல் வேட்டையை தீவிரபடுத்தி உள்ளனர். தமிழ் இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போருக்கு பின்னர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று பின்னர் நாடு திரும்பியுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களை அடையாளம் காணுவதே இந்த தேடுதல் வேட்டையின் முக்கிய நோக்கம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TAGS: