இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இரண்டு இராணுவ நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட 30 மாத சிறைத்தண்டனை இன்றுடன் (26.04.2012) முடிவுக்கு வருகிறது.
சரத் பொன்சேகா மீது மேலும் இரண்டு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அவர் உடனடியாக விடுதலை செய்யப்படமாட்டார். எனினும் அவரைப் பிணையில் விடுவிக்கும் முயற்சிகள் கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை குடியரசுத் தலைவர் செயலகத்தில் இருந்து இதற்கு எதிர்ப்புகள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் அவர் மீது மேலும் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால், அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.