இசி தலைவரும் துணைத் தலைவரும் “பதிவு செய்யப்பட்ட அம்னோ உறுப்பினர்கள்”

இசி தேர்தல் ஆணையத் தலைவரும் துணைத் தலைவரும் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அம்னோ தொகுதிகளை பிகேஆர் இன்று அம்பலப்படுத்தியுள்ளது.

இசி தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப், அம்னோ அம்பாங் தொகுதியிலும் அவரது துணைவரான வான் அகமட் வான் ஒமார், பாசிர் மாஸ் தொகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுதின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இரண்டு உயர்நிலை இசி அதிகாரிகளும் அம்னோ உறுப்பினர்கள் என நேற்று பிகேஆர் அறிவித்தது. இன்று அவர்கள் எந்த அம்னோ தொகுதியில் உறுப்பினர்களாக உள்ளனர் என்ற தகவலை சைபுதின் வெளியிட்டுள்ளார்.