பெர்சே 3.0 பேரணியில் 250,000 பேர் பங்கு கொண்டனர்; அது பெரிய வெற்றி: அம்பிகா

பெர்சே 3.0 பேரணி பெரிய வெற்றி என தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே 2.0 கூறுகிறது. உண்மையான தேர்தல் சீர்திருத்தங்களுக்கான வேண்டுகோள் விடுக்கும் நடத்தப்பட்ட அந்தப் பேரணியில் 250,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக அது தெரிவித்தது.

“அந்த வகையில் அது பெரிய வெற்றி,” என தூய்மையான நியாயமான தேர்தல்களுக்குப் போராடும் அந்தக் கூட்டு அமைப்பின் கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறினார்.

அவர் பேரணிக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

“சூழ்நிலை மிகவும் நன்றாக இருந்தது. பெரும் எண்ணிக்கையில் மக்கள் பங்கு கொண்டனர்-அது மகத்தானது.”