“குறைந்த அளவே பாதிப்பைக் கொண்டதா? அப்படி என்றால் உங்களை வைத்துச் சோதனை செய்யலாமே?”

“நீங்கள் மட்டும் அன்றைய தினம் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களில் ஒருவராக இருந்தால் உங்கள் ஆத்திரம் வானை முட்டியிருக்கும் என நான் பந்தயம் கட்ட முடியும்.”

“கூட்டத்தைக் கலைப்பதற்கு நீரைப் பாய்ச்சுவதே குறைந்த அளவுக்குப் பாதிப்பைக் கொண்ட வழியாகும்”

அடையாளம் இல்லாதவன்#07443216: ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் அவர்களே, பேரணியில் பங்கு கொண்டவர்கள் மீது முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுமாறு உங்கள் ஆட்களுக்கு ஆணையிட்டு விட்டு, இப்போது புரிந்து கொள்ளுமாறு பத்திரிக்கையாளர்களிடம் மன்றாடுகின்றீர்கள். மலேசியர்கள் உங்கள் இரட்டை வேடத்தைக் கண்டு மயங்கி விடுவார்கள் என எண்ணுகின்றீர்களா ?

நீங்கள் மட்டும் அன்றைய தினம் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களில் ஒருவராக இருந்தால் உங்கள் ஆத்திரம் வானை முட்டியிருக்கும் என நான் பந்தயம் கட்ட முடியும். ஐஜிபி சொல்வதையும் உள்துறை அமைச்சர் சொல்வதையும் செவிமடுப்பதற்கு உங்களுக்கு மனம் இருக்காது.

2zzzxxx: இஸ்மாயில் ஒமார் அவர்களே, நீங்களும் பிரதமர் நஜிப் ரசாகும் சாலையில் நிற்கலாம். நாங்கள் உங்கள் மீது ரசாயனம் கலந்த அந்த நீரை உங்கள் மீது மகிழ்ச்சியோடு பாய்ச்சி அது உண்மையில் காயத்தை ஏற்படுத்துகிறதா என்பதைச் சோதனை செய்து பார்ப்போம்.

நீங்கள் சொல்வதும் செய்வதும் முட்டாள்தனமாக இருக்கிறது. அண்மைய காலமாக இந்த அம்னோ வழி நடத்தும் நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாடும் அதனைப் பயன்படுத்துவதே இல்லை.

குழப்பமில்லாதவன்: திரு ஐஜிபி அவர்களே, நீங்கள் வாயைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் முட்டாள் எனக் காட்டிக் கொள்கின்றீர்கள். நீங்கள் வழக்கம் போல முக்கியமான விஷயத்தைத் தவற விட்டு விட்டீர்கள்.

உங்களுடைய உண்மையான எஜமானர்களான பொது மக்களுக்கு ஆபத்தைக் கொண்டு வருவது இரசாயனம் கலந்த நீரோ கண்ணீர் புகைக் குண்டுகளோ அல்ல- அவை ஏற்படுத்தும் அச்சமே காரணமாகும்.

நான் அங்கு இருந்தேன். அது எவ்வளவு ஆபத்தானது என்பதை நான் உங்களுக்கு கூற முடியும். குறுகலான சாலைகளில் தப்பிப்பதற்கு எந்த வழியும் இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்டனர்.(எல்ஆர்டி நிலையங்களின் கதவுகள் கூட மூடப்பட்டிருந்தன)

தடுப்புக்கள் மீறப்பட்ட உடனடிப் பகுதிக்கு அப்பாலும் நீரைப் பாய்ச்சியதாலும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாலும் மக்கள் அச்சமடைந்து ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஒடத் தொடங்கினர் (அது வரையில் எல்லாம் அமைதியாகவும் விழாக் கோலமாகவும் இருந்தது)

அந்தக் கூட்டத்தில் பின்னுக்கு இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. அவர்கள் தொடர்ந்து சதுக்கத்தை நோக்கி முன்னேறினர். அதே வேளையில் கலகத் தடுப்புப் போலீஸ் நடவடிக்கைக்கு அருகில் இருந்தவர்கள் பின்வாங்கிய போது நெரிசல் ஏற்பட்டது.

பல முதியவர்கள் உட்பட நாங்கள் மிகவும் அபாயகரமான சூழலில் சிக்கிக் கொண்டோம்.

பென்ஹாசி: டாத்தாரான் மெர்தேக்காவை ஆக்கிரமிக்க நல்ல புத்தியுள்ள யாரும் எண்ணவே மாட்டார்கள்.மக்களுக்கு அது மிக அவசியம் என்பதற்கு அங்கு என்ன உள்ளது ?

வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாராகும் அங்காசாபுரி போன்றதல்ல அது. அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பும் இராணுவ ஜெனரல் ஒருவர் தாம் அதிகாரத்தைக் கைப்பற்றியது பற்றி நாட்டுக்கு அறிவிக்க அங்காசாபுரியை ஆக்கிரமிக்க விரும்பலாம்.

ஆனால் டாத்தாரான் மெர்தேக்காவில் என்ன இருக்கிறது ? அதன் கீழ் என்ன மறைத்து வைக்கப்பட்டுள்ளது. மக்கள் சீற்றத்திலிருந்து தப்பிக்கும் போது பிரதமர் விமானம் மூலம் கொண்டு செல்வதற்குத் தங்கப்பாளங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளனவா ?

கைரோ: போலீசார் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டனர் என்றால் அவர்கள் ஏன் தடுப்புக்களை மீறிய சம்பவத்துடன் தொடர்பு இல்லாத அப்பாவி மக்கள் மீது நீரைப் பாய்ச்ச வேண்டும். கண்ணீர் புகைக் குண்டுகளை வெடிக்க வேண்டும் ?

டாத்தாரானிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவு வரை சென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸ் வாகனங்கள் ஏன் இரசாயன நீரை ஏன் பாய்ச்ச வேண்டும் ?

போலீசார் ஏன் சாலைகளையும் சந்துகளையும் ஈவிரக்கமில்லாமல் மூடி விட்டு மக்களுக்கு காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே கண்ணீர் புகைக் குண்டுகளை வெடிக்க வேண்டும் ?

பாதிக்கப்பட்ட மக்கள் அப்பாவிகள் என்பதும் தங்களைத் தற்காத்துக் கொள்ள வழியில்லாதவர்கள் என்பதும் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா ? மக்கள் மீது இரக்கம் இல்லாத அளவுக்கு நமது அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியாகி விட்டதா ?

ஊழலும் அதிகாரமும் தலைவர்களுடைய கண்களை மறைத்து விட்டதா ? அதனால் அவர்கள் இரும்புக்கரத்துடன் நாட்டை ஆளுகின்றனரா ?

பூமிஅஸ்லி: உயர் நிலையில் உள்ள அதிகாரிகள் ஏன் இது போன்ற கருத்துக்களை வெளியிடுகின்றனர் என்பதுஎனக்கு இது வரை புரியவே இல்லை. அவர்கள் ஒருவருக்கு பின் ஒருவராக தங்களை முட்டாளாக்கி கொள்கின்றனர்.

சாதாரண நீருக்குப் பதில் ஏன் இரசாயன நீரைப் பயன்படுத்துகின்றனர் என்பதே கேள்வி ஆகும். ஆர்ப்பாட்டக்காரர்களிடம் துப்பாக்கிகளும் மூகமூடிகளும் தலைக்கவசங்களும் இருந்தனவா ?

கூட்டத்தினர் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களுக்கு சொல்வதற்கு போலீசார் ஏன் ஒலிபெருக்கிக் கருவிகளைப் பயன்படுத்தவில்லை.

கனவான்களே உங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு காரணங்களைத் தேடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

மக்கள் விரும்புவது உங்கள் கண்களுக்கு புலப்படவில்லையா ? சட்டத்தின் பெயரில் குண்டர்களைப் போல நடந்து கொள்வதை நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிரோம். நமது போலீஸ் படையுடன் இருக்கும் போது நாங்கள் பாதுகாப்பான உணர்வைப் பெற விரும்புகிறோம்.

இன்று நாங்கள் போலீசார் இல்லாத சூழ்நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக கருதுகிறோம். திரு ஐஜிபி அவர்களே, அது உங்களுக்கு நல்லதா ? நீங்கள் உங்கள் வழிகளில் மாற்றிக் கொண்டால் நீங்கள் செய்ததைத் திருத்திக் கொள்ள முடியும். உங்களுக்கு மீண்டும் கௌரவம் கிடைக்கும்.

Hmmmmmmmm: நல்லது. நீரைப் பாய்ச்சும் கருவிகள் வாடகைக்குக் கிடைக்குமா ?

நான் அடுத்த வாரம் விருந்து ஒன்றை நடத்த எண்னியுள்ளேன். என் விருந்தினர்களில் சிலர் கூடுதல் நேரம் தங்கக் கூடிய பழக்கம் உடையவர்கள். அவர்களுக்குக் குறைந்த அளவு பாதிப்பு மட்டுமே ஏற்படும் வகையில் அதனை நினைவுபடுத்த அந்தக் கருவிகள் உதவக் கூடும்.

——————————————————————————–

TAGS: