“அந்த வணிகர்கள் வியாபாரத்தை இழந்ததற்குக் காரணம் அவர்களுடைய முட்டாள்தனமாகும். ஏப்ரல் 28ம் தேதி அவர்களை யார் கடைகளை மூடச் சொன்னது?”
ஆத்திரமடைந்துள்ள வணிகர்கள் அம்பிகா கைது செய்யப்பட வேண்டும் என விரும்புகின்றனர்
பெண்டர்: எல்லா இடத்திலும் நிறைந்துள்ள பெர்சே ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். அந்த வணிகர்களுடன் மீண்டும் ஒரு போதும் வர்த்தகம் செய்ய வேண்டாம். அந்த வணிகர்கள் வியாபாரத்தை இழந்ததற்குக் காரணம் அவர்களுடைய முட்டாள்தனமாகும். ஏப்ரல் 28ம் தேதி அவர்களை யார் கடைகளை மூடச் சொன்னது ? பெர்சே தங்களது வியாபாரத்தைக் கெடுத்து விடும் என அவர்கள் அச்சப்பட்டதே அதற்குக் காரணம்.
கவலைப்பட வேண்டாம் என பெர்சே அவர்களுக்குத் திரும்பத் திரும்ப அறிவுரை கூறியது. ஆனால் அவர்கள் ‘அந்தப் பொய்யர் நஜிப்’ சொன்னதற்கு செவி சாய்க்க முடிவு செய்தனர். இப்போது ‘padan muka mereka semua’.
ஆனால் அவர்களுக்கு அது போதவில்லை. தங்கள் முட்டாள்தனத்துக்கு அவர்கள் இழப்பீடும் கோருகின்றனர். அவர்களுடைய இழப்புக்கு அரசாங்கம் மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்தி இழப்பீடு கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோருகின்றனர். உண்மையில் மடத்தனமாது, இல்லையா?
பெர்சே பங்கேற்பாளன்: அந்த மலாய் வணிகர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என எண்ணுகிறேன். மஸ்ஜித் ஜமெய்க் எல்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள சாலையில் அமைக்கப்பட்டிருந்த மலாய் சுவை நீர் விற்பனைக் கடைகளில் அன்றைய தினம் வெகு சுறுசுறுப்பாக வியாபாரம் நடைபெற்றது.
அந்த நிலையத்துக்கு அருகில் ஜாலான் துன் பேராக்கில் இருந்த மலாய் உணவு விடுதியில் போத்தல்களில் அடைக்கப்பட்ட நீர் கையிருப்புத் தீர்ந்து விட்டது. டின்களில் அடைக்கப்பட்ட சுவை பானங்களும் விற்று முடிந்து விட்டன.
உண்மையில் அன்றைய தினம் வியாபாரம் படு வேகமாக இருந்தது. அதன் உரிமையாளர் இன்னொரு பெர்சே பேரணி எப்போது நிகழும் எனப் புன்னகையுடன் கேட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இழப்பீடு கோரும் அந்த மலாய் வணிகர்கள் கோழைகள். “Tak payah marah orang lain atas pilihan sendiri untuk tutup kedai.”
அது ஒரு புறம் இருக்க, எந்தக் கடையாவது நொறுக்கப்பட்டதா அல்லது அவற்றின் பொருட்கள் திருடப்பட்டதா ? அந்த மலாய் வணிகர்கள் இன்னொரு பிச்சையை எதிர்பார்க்கின்றனர். தங்களது அரசியல் எஜமானர்களிடமிருந்து உறிஞ்ச விரும்புகின்றனர்.
உங்கள் அடிச்சுவட்டில்: அந்த செய்தியில் காணப்படும் படத்தைப் பாருங்கள். அந்த அம்னோ பிஎன் ஆதரவாளர்கள் கூட மனித உடலில் ஆர்வத்தைத் தூண்டும் சில பாகங்களைத் தவிர வேறு எதனையும் சிந்திக்க மாட்டார்கள் எனத் தோன்றுகிறது. அதற்கு மேல் நாம் என்ன சொல்ல வேண்டும் ?
கர்மா: அம்னோ விரக்தி அடைந்துள்ளது. இழந்த ஆதரவைப் பெற அது என்ன வேண்டுமானாலும் செய்யும். பெர்சே 3.0 பேரணியில் பங்கு கொண்டவர்களில் பெரும்பாலோர் வணிகர்கள் ஆவர். அவர்கள் ஆட்சேபம் தெரிவிப்பதற்காக தங்கள் கடைகளை மூடினர்.
ஆர்ப்பாட்டம் செய்வதற்குப் பெரும்பாலும் மலாய்க்காரர்களான பங்கேற்பாளர்களை பெர்சே தலைவராக இருக்கும் ஒர் இந்திய மாது எஸ் அம்பிகா ஒன்று திரட்ட முடியும் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ? அது பற்றிச் சற்று சிந்தியுங்கள்.
பீரங்கி: பதாதைகளைப் பாருங்கள். செக்ஸ் வெறி பிடித்த அம்னோ சிந்தனைகள் அவற்றில் தெரியும்.
நீதிபதி டிரெட்: அந்த குடும்ப மாதர்கள் வைத்துள்ள படங்களை பார்த்து எனக்கு சிரிப்பு கொள்ளவில்லை. ஆபாசமான செக்ஸ் சமிக்ஞைகள் வழி அவர்கள் எதிர்க்கட்சிகளின் சின்னங்களைக் கேலி செய்கின்றனர். அந்தப் பதாதையை ஏந்தியுள்ள பெண்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன்.
அந்த பதாதை பெண்களை இழிவுபடுத்துகின்றது என்பதை அவர்கள் உணரவில்லையா ? அவர்களுடைய பிள்ளைகள் என்ன நினைப்பார்கள் ?
ஜெரோனிமோ: சீன முதுமொழி ஒன்று உண்டு-ஒவ்வொரு நெருக்கடியிலும் வாய்ப்புப் பிறக்கும் என்பது தான் அது.
கடந்த சனிக்கிழமையன்று மூன்று சீனக் கோப்பிக் கடைகளிலும் மூன்று மாமா கடைகளிலும் வியாபாரம் படு வேகமாக இருந்ததை நான் கண்டேன்.
அவர்கள் கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்கள் Sprite டின் ஒன்றுக்கு மூன்று ரிங்கிட் என அதிக பட்ச விலையைக் கூட வசூலித்தனர்.
அந்த மலாய் வணிகர்கள் வானத்திலிருந்து பணம் கொட்டும் என எதிர்பார்ப்பது தான் பிரச்னையே. அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்யுமாறு அவர்களை நிச்சயம் அம்னோ தீய சக்திகள் தூண்டியிருக்க வேண்டும். அந்த நிகழ்வு நடந்து ஒரு வாரத்திற்குப் பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளது இன்னும் வினோதமாக இருக்கிறது.
அவர்கள் ஏன் முன்னரே ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை ? துணிச்சல் இல்லையா ? “கடைசி ரத்தம் வரை போராடுவோம்” என்பது அம்னோவின் வழக்கமான பல்லவியாகும். அது அம்னோ துண்டி விட்ட நாடகம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
சிவிக்: நாள் ஒன்றுக்கு 200,000 ரிங்கிட் இழப்பா ? அது உண்மையில் மாதம் ஒன்றுக்கு 3.4 மில்லியன் ரிங்கிட் ஆகும். அந்த லட்சாதிபதிகள் சாலைகளில் ஏன் அந்த 200,000 ரிங்கிட்டுக்காக கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் ?
கோசோங் கபே: அவர்கள் வருமான வரி செலுத்துகின்றார்களா என்பதை ஆராயுங்கள். இல்லை என்றால்அவர்களுடைய சராசரி வருமானத்தைக் கணக்கிட்டு அவர்களுக்கு வரி விதியுங்கள்.
கேஎஸ்டி: அவர்கள் ஏன் பெர்சே கூட்டுத் தலைவரான் ஏ சாமாட் சையட்டைத் தாக்கவில்லை. அவரும் ஏன்கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு துரத்தப்பட வேண்டும் எனக் கோரவில்லை ?