இலங்கையுடனான பேச்சுவார்த்தையை புதுப்பிக்க வேண்டும்: TNA

இலங்கை அரசுடன் தடைபட்டுள்ள பேச்சுவார்த்தை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் மாகாணங்களில் அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை அந்நாட்டு அரசுடன் நடைபெற்று வந்தது. மாகாணங்களுக்கு காவல் அதிகாரம் வழங்குவது உள்பட பல்வேறு விவகாரங்கள் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பேச்சுவார்த்தை நின்று போனது. மேலும், அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்றும் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நின்று போன பேச்சுவார்த்தை விரைவில் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்ற தேர்வுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்வதற்கு முன்பாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

TAGS: