“வழக்கமாக அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சிகளைப் பற்றி எதிர்மறையான (கவலைப்படும்) கருத்துக்களைத் தெரிவித்தால் உண்மையான நிலைமை மோசமாக இருப்பது திண்ணம்.”
பிஎன் சிலாங்கூரை மறந்து விடலாம் என்கிறார் முன்னாள் மசீச தலைவர் லிங்
Anonyxyz: டாக்டர் லிங் லியாங் சிக், ஊமையைப் போன்று தோற்றமளித்தாலும் உண்மையில் கெட்டிக்காரர். டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் இயங்கிய பணத்தைக் கொள்ளையடிக்கும் எந்திரத்தில் விருப்பமுள்ள பகடைக் காயாக தாம் இருந்ததைக் காட்டும் சரியான ஆவணங்களை அவர் நிச்சயம் வைத்திருக்க வேண்டும்.
போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி பண ஏய்ப்பு மோசடியில் தம்மை பலிகடாவாக தியாகம் செய்ய அவர்கள் விரும்பினால் அவர் எதனை அம்பலப்படுத்துவார் என்பது ஆர்வத்தைத் தூண்டும் விஷயமாகும்.
தாம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவது பற்றி அவர் கவலைப்படவே இல்லை. ஆனால் அண்மைய நிகழ்வுகள் தேவைப்படுமானால் பயன்படுத்திக் கொள்வதற்கு சில ஆபத்துக் காப்புறுதிகளை வாங்குவதற்கு அவரைத் தூண்டியிருக்க வேண்டும். அந்தப் பேட்டியில் அவர் பக்காத்தான் ராக்யாட்டுக்கும் அம்னோவுக்கும் தெளிவான செய்தியை மறைமுகமாக அனுப்பியுள்ளார்.
சக மலேசியன்: துன் அவர்களே, பக்காத்தனுடைய தோற்றம் களங்கம் இல்லாமல் இருப்பதால் சிலாங்கூரில் அது மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என துணிச்சலுடன் ஒப்புக் கொண்ட உங்களுக்கு நன்றி. ஊழல் காரணமாக பிஎன் நசுக்கப்படும் என மறைமுகமாக நீங்கள் சொல்வதாகத்தான் கருத வேண்டும்.
13வது பொதுத் தேர்தலில் பிஎன் தண்டிக்கப்படும் எனக் கூறியுள்ள முதலாவது முன்னாள் பிஎன் தலைவர் நீங்களே.
ஆனால் பேராக்கில் சீனர்களுக்கு வேறு வழி இல்லை என நீங்கள் சொல்லியிருப்பதின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. பினாங்கை போன்று பேராக்கில் உள்ள சீனர்களும் ஒரங்கட்டப்பட்டனர். அலட்சியம் செய்யப்பட்டனர்.
அடையாளம் இல்லாதவன் #57019477: வழக்கமாக அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சிகளைப் பற்றி எதிர்மறையான (கவலைப்படும்) கருத்துக்களைத் தெரிவித்தால் உண்மையான நிலைமை மோசமாக இருப்பது திண்ணம்.
ஆகவே அந்தப் பேட்டியிலிருந்து பிஎன் எதிர்க்கட்சிகள் வசமுள்ள மாநிலங்களில் தோல்வி காண்பதோடு பேராக்கையும் ஜோகூரையும் இழக்கக் கூடிய அபாயத்தில் உள்ளது என்றுதான் எண்ண வேண்டும்.
அவர் சபா, சரவாக்கைப் பற்றிப் பேசவே இல்லை. அந்த இரு மாநிலங்கள் மீது கூட பிஎன்-னுக்கு நம்பிக்கை இல்லையோ எனத் தோன்றுகிறது.
ஒய்எப்: அன்புள்ள திரு லிங், சிலாங்கூருக்கும் பினாங்கிற்கும் நல்லதாக உள்ளது மலேசியாவுக்கு நல்லதாக இருக்காது எனச் சொல்ல வருகின்றீர்களா ?
ஆகவே சிலாங்கூரிலும் பினாங்கிலும் நடப்பதைப் போன்று எல்லா மாநிலங்களுக்கும் தூய்மையான அரசாங்கங்கள் தேவை என நீங்களே ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.
பிஎன் நல்லதில்லை என லிங் தெளிவாகச் சொல்லி விட்டதால் நாங்கள் மிகவும் நல்லவர்கள் எனக் காட்டிக் கொள்வதற்காக நாடகம் நடத்துவதை பிஎன் தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
என்ன நடக்கிறது: இந்த போலேலாந்தில் வாய்ப்புக் கிடைக்கும் போது சுருட்டி விட வேண்டும். நீங்கள் பில்லியன் கணக்கில் சேர்த்த பின்னர் கடின உழைப்பு மூலம் செல்வந்தரானதைப் போன்று (இந்த இடத்தில் மோசடி, ஊழல் மூலம்) நீங்கள் தார்மீகப் பண்புகள் பற்றிக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
இந்த எல்லா ஊழல் செல்வந்தர்களும் துன்-களும் மற்றவர்களும் வாயை மூடிக் கொண்டு தெய்வத்தின் தண்டனைக்காக காத்திருக்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக அவர்களில் யாருமே கடவுளைக் கண்டு பயப்படவே இல்லை. அதனால் எவ்வளவுதான் இறைவனைப் பற்றிச் சொன்னாலும் அவர்களுக்கு ஞானோதயம் பிறக்காது. அதற்கு மாறாக அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொண்டு இன்னும் அதிகமான மக்களை ஊழல் பட்டியலில் சேர்ப்பார்கள். வெறுப்பையும் தூண்டுவார்கள்.
உண்மையில் அவர்களுக்கு வெட்கமே இல்லை. முழுக்க முழுக்க தார்மீகப் பண்பு இல்லாதவர்கள்.
அடையாளம் இல்லாதவன் #07443216: தாம் கல்லறையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது லிங் லியாங் சிக்-கிற்கு நன்கு தெரியும். அதனால் அவர் திருந்துவதற்கு முயலுகிறார். அவர் அதனைச் செய்துள்ளார். இப்போது மறுமையில் தமக்கு என்ன காத்திருக்கிறதோ என லிங் இப்போது கவலைப்படத் தொடங்கியுள்ளார்.
ஒருவர் இறக்கும் தறுவாயில் இருக்கும் போதுதான் மறுமையில் தமக்கு என்ன நேருமோ என அச்சம் கொள்ளத் தொடங்குவார். அதனால் தன்னைப் படைத்தவனை சந்திக்கும் முன்னர் திருந்துவதற்கு அவர் முயலுவார்.