தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்டமைப்பில் நீதிபதியாக பணிபுரிந்த கே.பி லங்காசேவாரன் என்பவரை கொழும்பு நீதிமன்றம் புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு இன்று உத்தரவிட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு காலக்கட்டத்திற்கு முன் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீதித்துறையில் செயல்பட்டு வந்ததாக இலங்கை நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அத்துடன் அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் சட்ட நிபுணராக செயற்பட்டுள்ளார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர், இலங்கை சட்டக்கல்லூரியில் கல்வி கற்றபோது விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக கொழும்பு நீதிமன்றத்தில் அரச வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.