அந்திம காலத்தில் அம்னோவின் அசிங்கமான முகம்

“பெர்சே கூட்டுத் தலைவர் எஸ் அம்பிகா மீது நடத்தப்படுகின்ற தாக்குதலும் அது தொடர்பான விஷயங்களும் உண்மையைச் சொல்கின்றன.”

அம்பிகாவுக்காக  நடத்தப்பட்ட நிகழ்வில் முட்டைகளும் கற்களும் வீசப்பட்டன

Hmmmmmmmm: விரக்தி அடைந்துள்ள அரசாங்கம் ஆத்திரமாக இருக்கிறது. நாம் அவர்களுடைய வன்முறை தந்திரங்களுக்கு இடம் அளித்து விடக் கூடாது. தொடர்ந்து புத்ராஜெயா மீது கவனம் செலுத்த வேண்டும்.

நாம் பயந்து விட்டதாகக் காட்டிக் கொண்டால் தங்கள் ஆட்சி மருட்டலுக்கு இலக்காகியுள்ளது என அவர்கள் எண்ணுகின்ற போதெல்லாம் அந்தத் தந்திரத்தைப் பயன்படுத்துவர். ஆனால் எல்லோரும் அவர்களை அலட்சியம் செய்தால் அவர்கள் தங்கள் வழியை மாற்றிக் கொள்வார்கள்.

அம்பிகாவும் பெர்சே-யும் கடந்த 50 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் செய்ய முடியாத, மக்கள் ஒற்றுமையைச் சாதிக்க முடியும் என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே என்ன விலை கொடுத்தாவது அவரை நிறுத்த வேண்டும்.

ஆனால் அவர்கள் எண்ணத்தில் பெரிய கோளாறு உள்ளது. எந்த ஒரு தனி நபரைக் காட்டிலும் பெர்சே பெரியது. காரணம் பெர்சே என்றால் மக்கள் என அர்த்தம்.

கைரோஸ்: அரசாங்கத்தில் அம்னோ ஆதிக்கம் செலுத்தும் வரை இது போன்ற அடாவடித்தனங்கள் இயல்பானவை என மலேசியர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். குண்டர்தனமும் ரௌடித்தனமும் அன்றாட நிகழ்வுகளாகி விடும்.

இது போன்ற வன்முறை கலாச்சாரத்தை ஏற்கனவே போலீஸ்காரர்கள் எத்தகைய தற்காப்பும் ஆயுதமும் இல்லாத குடிமக்கள் மீது பயன்படுத்தியுள்ளனர். ஆகவே தங்களுக்கு எதிரானது என தாங்கள் கருதும் எந்தக் கூட்டத்தின்மீதும் குண்டர்களையும் ரௌடிகளையும் அவர்கள் ஏவி விடுவதில் எந்த வியப்பும் இல்லை.

இந்த நாட்டின் தார்மீகப் பண்புகள் எந்த அளவுக்குத் தாழ்ந்து விட்டது என்பதைப் பாருங்கள். முன்னாள் இராணுவ வீரர்கள் பின்புறத்தைக் காட்டி நடத்திய உடற்பயிற்சி பினாங்கு முதலமைச்சர் வீட்டுக்கு முன்னாள் பெர்க்காசா உறுப்பினர்கள் நடத்திய நாகரீகமற்ற காரியங்கள் எல்லாம் நாடு பரிதாபகரமான நிலையில் இருப்பதை காட்டுகிறது.

நாம் முழுமையாக எல்லாவற்றையும் திருத்த வேண்டும்.

ஸ்வொபெண்டர்: அம்னோவின் அச்சுறுத்தல், மிரட்டல், வன்முறைகள் பக்காத்தான் நிகழ்வுகளில் அவிழ்த்து விடப்படுகின்றன.

உண்மை: குண்டர்கள், ரௌடிகள். அவர்களுடன் யாரும் விவாதிக்க முடியாது. வன்முறைகள்தான் அவர்களுக்குத் தெரியும். அந்திம காலத்தில் அம்னோவின் அசிங்கமான முகம் அதுதான்

TAGS: