ஜயிஸ் வெளியீட்டாளர் அலுவலகத்தை சோதனை செய்து மாஞ்சிஸின் புத்தகங்களைப் பறிமுதல் செய்தது

ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை, வெளியீட்டாளரின் அலுவலகத்தைச் சோதனை செய்து தாராளச் சிந்தனை கொண்ட முஸ்லிம் ஆசிரியரான இர்ஷாட் மாஞ்சிஸ் எழுதிய ‘Allah, Liberty & Love’ என்னும் புத்தகத்தின் மொழியாக்கப் பதிப்புக்களைப் பறிமுதல் செய்துள்ளது.

பெட்டாலிங் ஜெயா மர்ச்செண்ட் சதுக்கத்தில் உள்ள தமது அலுவலகத்திற்கு இன்று காலை 20 ஜயிஸ் அதிகாரிகள் வந்ததாக  ZI Publications நிறுவனத்தின் இயக்குநர் எஸ்ரா ஜைட், டிவிட்டர் இணையத் “தளம் வழி தகவல் கொடுத்தார்.

 “சிலாங்கூர் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜயிஸ் அலுவலகத்துக்கு வந்தது. 20 பேர் வந்தனர் (அது தான் வழக்கம் போலத் தெரிகிறது) புத்தகங்களை எடுத்துக் கொண்டனர். அவர்கள் என்னையும் எடுத்துக் கொள்ளலாம்,” என 20 நிமிடங்களுக்கு முன்னர் அனுப்பிய டிவிட்டர் செய்தியில் எஸ்ரா ஜைட் குறிப்பிட்டுள்ளார்.

 

TAGS: