இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தோனேசியாவில் உண்ணாநோன்பு

இந்தோனேசியா Tanjungpinang அகதி முகாமில் இரண்டு ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டிருக்குமு; இலங்கைத் தமிழர்கள் சாகும் வரையிலான உண்ணாநோன்பு போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.

தமக்கான உரிய தீர்வினை UNHCR அமைப்பு வழங்கும் வரை தாம் சாகும் வரையிலான உண்ணாநோன்பு போராட்டத்தினை மேற்கொண்டிருப்பதாக இந்தோனேசியா அகதி முகாமினுள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றுடன் மூன்றாவது நாளாக தமது உண்ணாநோன்பினை மேற்கொண்டவண்ணம் உள்ள அவர்கள், தமக்கான விடியலினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழக அரசியல் தலைவர்கள் பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

TAGS: