மஹிந்த இலண்டன் வருகை: தமிழர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் முற்றுகை!

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச லண்டன் வருகின்றார் என்ற தகவலையடுத்து கீத்துறூ விமான நிலையத்தில் பெருந்திரளான தமிழ் மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரித்தானிய காவற்துறையினரின் தடைகளையும் தாண்டி, மக்கள் Terminal 4-இல் தமிழீழ தேசியக் கொடிகளை கையில் ஏந்தியவாறு “Sri Lanka President War Criminal” என்ற கோசத்துடன் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர்.

மகிந்த ராஜபக்ச இலண்டனுக்குள் வந்துவிட்டாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை எனினும் ராஜபக்சே இலண்டனுக்குள் புகுந்தாள் அவரை இலங்கைக்கு விரட்டும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை என அங்கு கூடியிருந்த உணர்வாளர்கள் சூளுரைத்தனர்.

தொடர்ந்து பெய்துகொண்டிருக்கும் குளிர் மழையையும் பொருட்படுத்தாது, இனக்கொலை வெறியன் மஹிந்தவை இலண்டனுக்குள் காலடி வைக்க விடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு வலுச்சேர்க்க எல்லா தமிழ் உறவுகளையும் அணிதிரண்டு வருமாறு பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளன.

கடந்த முறை மகிந்த ராஜகபக்சேவுக்கு எதிராக பிரித்தானிய தமிழர்கள் மேற்கொண்ட தொடர் ஆர்ப்பாட்டங்களால் அவர் இலங்கைக்கு உடனடியாக விரட்டி அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TAGS: