தமிழர்களின் முற்றுகையினால் விடுதியை விட்டு தப்பி ஓடிய ராஜபக்சே!

இலங்கை குடியரசுத் தலைவரும் போர்க் குற்றவாளியுமான மகிந்தா ராஜபக்சே, பிரிட்டிஷ் மகாராணியின் வைரவிழா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள இலண்டன் வந்துள்ளார்.

ராஜபக்சே இலண்டன் வந்துள்ள செய்தியை அறிந்த இலண்டன் வாழ் தமிழர்கள் கொதிப்படைந்து ராஜபக்சே தங்கிருந்த விடுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அவர் தங்கிருந்த விடுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தான் தங்கிருந்த விடுதியை சுற்றி தமிழர்கள் முற்றுகையிட்டுள்ளதை அறிந்த ராஜபக்சே, அவ்விடுதியை விட்டு வெளியேறியுள்ளார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் வெளியேறியபோது விடுதியின் முற்புறத்தில் “ராஜபக்சே ஒரு போர்குற்றவாளி” என புலிக்கொடிகளுடன் கோசமிட்டவாறு தமிழர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.

மகிந்த கலந்துகொள்ளும் நிகழ்வு, அவர் விடுதியில் இருந்து புறப்பட்ட நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரங்களின் பின்னரே இடம்பெற இருந்த போதிலும், பாதுகாப்பு அச்சம் காரணமாகவே அவர் முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றிருக்கின்றார்.

இதேவேளை, மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மக்கள் சிலர் விடுதியின் எதிர்ப்புறத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜபக்சேவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆர்பாட்டத்தின்போது தமிழர்களை சிங்களவர்கள்  தாக்கியுள்ளனர். குறைந்த எண்ணிக்கையை கொண்ட தமிழர்கள், ராஜபக்சே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தபோது அங்கு வந்த சிங்களவர்களால் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்சேவை இலண்டனை விட்டு விரட்டும் வரை தொடர் ஆர்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வார்ப்பட்டங்களுக்கு இலண்டன் வாழ் அனைத்து தமிழர்களும் மனித உரிமை செயல்பாட்டகளும் வந்து கலந்துகொண்டு ஆர்பாட்டத்திற்கு வலுசேர்க்குமாறு இலண்டன் தமிழ் அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

TAGS: