போர்க்குற்ற அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பிவைப்பு

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற இறுதிகட்ட போரின் போது இடம்பெற்ற மனிதப் படுகொலைச் சம்பவங்களை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான போர்குற்ற அறிக்கையை நேற்று ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைப் பேரவை மற்றும் ஐ.நா. வின் உயர்ஸ்தானிகருக்கும் இது குறித்த அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் இது தொடர்பில் தான் தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது என்றும் அவர் மேலும் தெரிவத்துள்ளார்.

இக்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முழுமையாக மறுத்துள்ள நிலையில் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் விசாரணை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நா நிபுணர்க் குழுவின் அறிக்கையின் படி 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் சுமார் பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு இலங்கை இராணுவத்தினரால் சுமார் 40,000க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக பல்வேறு மனித உரிமை குழுக்கள் தொடர்ந்தும் கூறிவருகின்றன.

TAGS: