ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 150 அகதிகள் கைது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 150 இலங்கை அகதிகள் கொல்லத்தில் கைது செய்யப்பட்டனர்.

25 பெண்கள், 17 குழந்தைகள் உட்பட இந்த 150 பேரும் கொல்லத்தை அடுத்த சக்திகுளச்சான்குளம் என்ற பகுதியிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக இவர்கள் 50 ஆயிரம் இந்திய ரூபாய் முதல் 2 லட்சம் வரை கொடுத்ததாக தெரிகிறது.

தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து திருநெல்வேலிக்கு அழைத்து வருகின்றனர். இது குறித்து விசாரிக்க மறுபுலம் பெயர்ந்தவர்கள் அ‌‌‌‌னைவரும் நெல்லை வருகிறார்.

TAGS: