“இப்போது ‘நல்ல செய்தி’ என்கிறீர்களே, முதலிலேயே பிடிபிடிஎன் அந்தக் கெட்ட செய்தியை அறிவிக்கலாமலேயே இருந்திருக்கலாமே”.
பிடிபிடிஎன் பின்வாங்கியது,யுனிசெல், குயிஸ் கடன் முடக்கம் நீக்கம்
கோப்: பிடிபிடிஎன்(தேசிய உயர்கல்வி கடன் நிதி) கடன் முடக்கம் பிகேஆருக்கு வைக்கப்பட்ட சோதனை என்றார் துணைப் பிரதமர் முகைதின் யாசின்,
சோதனை வையுங்கள்.பணத்தை அதனிடம் கொடுத்து என்ன செய்கிறது என்று சோதித்துப் பாருங்கள்.பேனா, பென்சில், காகிதம் எதுவும் கொடுக்காமல் பரிட்சை எழுது என்றால் எப்படி எழுதுவது?
கடன் முடக்கத்தை நீக்காதிருந்தால், உங்களையும் உயர்கல்வி அமைச்சரையும் எதிர்த்து அம்னோ இளைஞர்கள் கிளர்ச்சியே செய்திருப்பார்கள். உங்கள் நடவடிக்கையால் விளைந்த நன்மையைவிட தீமையே அதிகம்.
உங்களைப் போன்றவர்களால் அம்னோவுக்கு எதிர்காலமே இல்லை.
கிளந்தான்காரன்: கடன்முடக்கம் நீக்கப்பட்டதோ இல்லையோ, பாதிப்பு ஏற்பட்டது ஏற்பட்டதுதான்.இச்சம்பவம் அம்னோ-பிஎன், மக்களின் நலன் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
மாணவர்களும் மலேசிய மக்களும் இதை நல்லதொரு பாடமாகக் கொண்டு 13வது பொதுத் தேர்தலில் அம்னோ-பிஎன்னைப் புத்ரா ஜெயாவிலிருந்து துரத்தி அடிக்க வேண்டும்.
நம்பிக்கையாளன்: ஒரு நல்லரசு குடிமக்களின் மேன்மைக்காகத்தான் பாடுபடும்.அவர்களை, அதுவும் குறிப்பாக மாணவர்களை அச்சுறுத்தும் வேலைகளை எல்லாம் செய்யாது.
மாணவர்களே நீங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு.நாட்டின் எதிர்காலமே உங்கள் கரங்களில்தான்.பொறுப்பற்றவர்ளால் நம் எதிர்காலம் பாழாக இடமளிக்காதீர்கள்.
லிம் சொங் லியோங்:அம்னோவின் சாயம் வெளுத்துவிட்டது.நம் பணத்தை வைத்துக்கொண்டு அரசியல் ஆடுகிறது, மாற்றுக்கட்சியினருக்குச் சவால்கள் விடுவதில் சுகம் காண்கிறது, மக்களை அதட்டி உருட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறது.
ஆனால், இந்தத் தடவை அது பலிக்கவில்லை.
ஒழுங்கான நியாயமான தேர்தல்: தங்கள் தயவை எதிர்பார்க்கும் நிலைக்கு சிலாங்கூரைக் கொண்டுவந்துவிட்டதாக அம்னோ நினைத்துக் கொண்டிருந்தது.ஆனால், நிலைமை தங்களுக்கு எதிராக திரும்பும் என்பதை அது சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஒரு காலத்தில் கீறல்கூட விழாமல் வலிமையுடன் திகழ்ந்த அம்னோவின் கவசத்தில் விரிசல்கள் தெளிவாக தெரிகின்றன.
மகிந்தர் சிங்:அந்திம காலம் வந்துவிட்டாலே வினோதமான காரியங்களில் ஈடுபடுவோம் என்று சொல்வார்கள்.தன் தலையிலேயே மண்ணை வாரிக் கொட்டிக்கொள்ளும் அளவுக்கு இப்படியொரு வியூகத்தை வகுத்த புண்ணியவான் யார்?
மாணவர்களையும் வரி செலுத்தும் அவர்களின் பெற்றோரையும் தண்டிக்க ஒருவர் மனத்தளவில்கூட நினைக்கலாமா?
பாதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பகுதியினர் மலாய்க்காரர்கள் என்று அறிகிறேன்.
அம்னோ மலாய்க்காரர்களைப் பாதுகாப்பதாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால்,அப்படி அல்ல என்று தெரிகிறது.அது தனக்கு வேண்டியவர்களை மட்டுமே பாதுகாக்கிறது.
நா!நா!நா!: பணம் என்ன பிடிபிடிஎன்னுக்குச் சொந்தமானதா? உயர்கல்வி அமைச்சர் ஏன் அப்படி ஓர் உத்தரவைப் போட்டார்?அவருடைய பணம் என்று நினைத்துக்கொண்டாரா?
குழப்பமற்றவன்:சிரிக்கிறேன்.சிரிக்கிறேன். விழுந்து விழுந்து சிரிக்கிறேன்.இந்த மடத்தனமான செயல் மேலும் பல மாணவர்களை பிஎன்னுக்கு எதிராக திருப்பி விட்டிருப்பதை நினைத்தால் சிரிப்புச்சிரிப்பாக வருகிறது.
பெயரிலி_3ff5:இப்போது ‘நல்ல செய்தி’ என்கிறீர்களே, முதலிலேயே பிடிபிடிஎன் அந்தக் கெட்ட செய்தியை அறிவிக்கலாமலேயே இருந்திருக்கலாமே.தேவையில்லாமல் ஒன்றைச் சொல்வது பிறகு மாற்றிக்கொள்வது இதுவே வாடிக்கையாகிவிட்டது.