“டேனியர் பற்றிய செய்தி மிகைப்படுத்தப்பட்டதா ? அதன் அர்த்தம் என்ன ? அவர் 20 மில்லியன் அமெரிக்க டாலரை மோசடி செய்து பையில் போட்டுக் கொள்ளவில்லை . 2 மில்லியன் ரிங்கிட்டை மட்டுமே எடுத்துக் கொண்டாரா ?”
டேனியருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மிகைப்படுத்தப்பட்டவை
உங்கள் அடிச்சுவட்டில்: நீங்கள் உங்கள் மருமகனை உங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருதினால் அந்த விவகாரம் குடும்பத்தின் அடுத்த பக்கம் அல்ல.
டேனியர் நஸ்ர்பயேவ்-வுக்கு எதிரான 20 மில்லியன் டாலர் வழக்கு பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை. காரணம் அது நீதிமன்றத்தில் வைக்கப்படும் சாட்சியங்களையும் வாதங்களையும் பொறுத்துள்ளது.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு அவர் பயன்படுத்திய சான்றிதழ்களைப் பற்றியே நான் அக்கறை கொண்டுள்ளேன். அவர் அதனை மறுக்க வேண்டும் அல்லது வழக்குப் போட வேண்டும் அல்லது விளக்கமளிக்குமாறு பல்கலைக்கழகத்தைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
அந்த விஷயம் தெளிவுபடுத்தப்படவில்லை என்றால் நீங்கள் மோசடிக்காரர் ஒருவரை உங்கள் மருமகனாக பெற்றுள்ளீர்கள். பல்கலைக்கழகத்துக்குள் மோசடி செய்து நுழைவது உங்களுடைய தார்மீக நன்னெறித் தரங்களுக்கு ஏற்புடையது என நீங்கள் கருதினால் அது வேறு விஷயம்.
ஸ்விபெண்டர்: டேனியர் வெளியில் வந்து கொலம்பியா பல்கலைக்கழகத்துக்குள் போலி ஆவணங்கள் சேர்ந்ததை மறுக்கிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
அவர் அப்படிச் செய்தால் நியூயார்க் போஸ்ட் மீது அவதூறு வழக்குப் போட்டு தமது பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக இந்த விஷயத்தில் மௌனம் நன்மையைத் தராது. உண்மையை ஒப்புக் கொள்வதாகவே கருதப்படும். குடும்பத் தகராறு ஒன்று நீதிமன்றத்துக்கு வந்துள்ளது. பல சுவாரசியமான தகவல்கள் நமக்கும் நீதிபதிக்கும் விசாரணையின் போது கிடைக்கும்.
ஒடின்: எவ்வளவு கெட்டிக்காரத்தனம். மிகைப்படுத்தப்பட்டது என்ற கருத்து, அந்த விஷயம் மீது அம்னோ இணைய எழுத்தர் ஒருவர் ( Amen ) எழுதியுள்ளது என் ஞாபகத்துக்கு வருகிறது.
அவரும் அது போன்ற ஒர் அம்சத்தையே சுட்டிக் காட்டியுள்ளார். செய்திகளில் அடிபடும் டேனியரும் நஜிப் புதல்வியை திருமணம் செய்யவிருக்கும் டேனியரும் ஒரே நபர் என்பது இது வரை உறுதி செய்யப்படவில்லை. அதனால் நியூயார்க் போஸ்ட் செய்தியை உணமையென ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அது சரி ! சரி ! சரி !
அனாக் பினாங்கு: நியூயார்க் போஸ்ட் அது போன்ற செய்தியை ஜோடித்திருக்கும் என நான் சந்தேகப்படவில்லை. காரணம் அந்தச் செய்திகளுக்கு ஆதாரங்கள் இருக்க வேண்டும். அங்கு ஊடக நிலைமை மலேசியாவைப் போன்றது அல்ல. அங்கு ஊடகங்கள் சுதந்திரமாக எழுதுகின்றன. விளக்கமும் அளிக்கின்றன. அவற்றைச் செய்தி என்றும் அழைக்கின்றன.
லூயிஸ்: நியூயார்க் போஸ்ட் செய்திகளை வேண்டுமென்றே மிகைப்படுத்தி வெளியிடும் உத்துசான் மலேசியாவைப் போன்றது என நீங்கள் எண்ணுகின்றீர்களா ?
எது எப்படி இருந்தாலும் தங்களுக்கு சாதகமாக இல்லாத செய்திகளை மறுப்பது தானே நமது தலைவர்களின் வழக்கம்.
நீர்மூழ்கி ரகசியங்கள் அம்பலமாகியுள்ளதைக் காட்டும் ஆவணங்கள் இருந்த போதிலும் நமது தலைவர்கள் அதனை இன்னும் மறுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஹங் பாயூப்: மிகைப்படுத்தப்பட்டதா ? அப்படி என்றால் சிறுவன் டேனியர் ‘சின்ன மோசடிக்காரரா ? டேனியர் பற்றிய செய்தி மிகைப்படுத்தப்பட்டதா ? அதன் அர்த்தம் என்ன ? அவர் 20 மில்லியன் அமெரிக்க டாலரை மோசடி பையில் போட்டுக் கொள்ளவில்லை. 2 மில்லியன் ரிங்கிட்டை மட்டுமே எடுத்துக் கொண்டாரா ? உண்மையில் என்ன வேடிக்கையான வாதம் ?
பிளைண்ட் பிரடோ: நமது பெருந்தலைவரையும் அவரது அழகான தலை மகளையும் “பிடிப்பதற்கு” உலகமே சதி செய்வதாகத் தோன்றுகிறது. உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது.