“மைரா அவர்களே நீங்கள் இன்னும் போலாட்-டுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தால் உங்கள் புதல்வருடைய திருமண நிச்சயதார்த்ததில் அவர் ஏன் காணப்படவில்லை ?”
அந்தக் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை என டேனியரின் தாயார் நிராகரிக்கிறார்
கலா: மைரா நஸர்பயேவ் (பிரதமர் நஜிப் ரசாக்கின் எதிர்கால மருமகன் டேனியரின் தாயார்) அளித்துள்ள விளக்கம் விளக்கமே அல்ல.
அவர் பொய் சொல்வது அவரது வழக்கம் என்பது அந்த அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. நெருக்குதலுக்கு இலக்காகியுள்ள அவர் நிலைமையைத் தெளிவுபடுத்துவதற்குப் பதில் மறுமொழி கிடைக்காத பல விஷயங்களை எழுப்பியுள்ளார்.
தமது புதல்வர் மீது சுமத்தப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிப்பதே அவரது நோக்கமாக இருந்தால் ( கொலம்பியா பல்கலைக்கழகத்திள் போலி சான்றிதழ்களைக் காட்டி சேர்ந்தது, குடும்ப உறவுகளை ஜோடித்தது, சொத்துக்கள் சட்ட விரோதமாக மாற்றப்பட்டது ஆகியவை) அவர் தமது புதல்வர் மீது எழுந்துள்ள ஐயங்களுக்கு நேரடியாகவே பதில் சொல்லியிருக்க வேண்டும்.
உண்மையில் தனிப்பட்ட விஷயம் என்ற போர்வையில் எல்லாவற்றையும் மறைப்பதற்கு அவர் முயன்றுள்ளார்.
டேனியரின் மாற்றான் தந்தை மௌனமாக இருக்கும் போது மைராவின் வார்த்தைகளை நம்பப் போகின்றார்கள் ?
சின்ன அரக்கன்: மேடம் மைரா அவர்களே, அளவுக்கு அதிகமாக உங்களை வருத்திக் கொள்ள வேண்டாம். ஐரோப்பாவில் உங்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழியுங்கள். அது தான் மிக முக்கியம். விடுமுறையிலிருந்து திரும்பிய பின்னர் வீசப் போகும் புயலை எதிர்கொள்ள தயாராகுங்கள்.
மீண்டும் சொல்கிறேன். நீங்கள் கவலைப்படவே வேண்டாம். எங்கள் அம்னோ/பிஎன் அரசியல்வாதிகளிடமிருந்து பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.
“பொய்களைச் சொல்வது, ஏமாற்றுவது, ஜோடிப்பது, மோசடி செய்வது, போலி ஆவணங்களைத் தயாரிப்பது, பதிவுகளையும் சாட்சியங்களையும் அழிப்பது, கொஞ்சம் கூட மூலதனம், நிபுணத்துவம், அனுபவம் இல்லாமல் பல மில்லியன் டாலர் குத்தகைகளைப் பெறுவது” ஆகியவற்றில் அவர்கள் உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க எப்போதும் தயாராக இருப்பார்கள்.
அரசாங்கத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் முக்கியமான ஆனால் பாதகமான சாட்சிகளை “எப்படித் திடீரெனக் காணாமல் போகச் செய்வது” போன்ற மாயவித்தைகளை நீங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.
அத்துடன் இன்னொரு விஷயம் அந்தப் பயிற்சிகளுக்கு உங்களுக்கும் உங்கள் புதல்வர் டேனியருக்கும் எந்தச் செலவும் ஏற்படாது . அதற்கான செலவுகளுக்கு மக்கள் வரிப்பணம் பயன்படுத்தப்படுவதை எங்கள் அரசாங்கம் உறுதி செய்து விடும்.
அனைவருக்கும் நியாயம்: மைரா அவர்களே நீங்கள் இன்னும் போலாட்-டுடன் சந்தோஷமாக குடும்பம்நடத்திக் கொண்டிருந்தால் உங்கள் புதல்வருடைய திருமண நிச்சயதார்த்ததில் அவர் ஏன் காணப்படவில்லை ? நீங்கள் யாரை முட்டாளாக்கப் பார்க்கின்றீர்கள் ?
பார்வையாளன்: அந்த வழக்கில் கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் பொய் என்றால் மைரா தமதுபுதல்வரைத் தேடிக் கொண்டிருக்கும் போலாட்-டின் வழக்குரைஞர்களிடம் அவர் எங்கு இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டும்.
அடுத்து அவரது புதல்வர் நீதிமன்றத்துக்குச் சென்று உண்மையை உரைக்கலாம். ஆனால் அவரது புதல்வர் மறைவாக வாழ்ந்து கொண்டு வழக்குரைஞர்களைத் தவிர்த்தால் என்ன சொல்வது ?
லிம் சொங் லியோங்: இரண்டு அன்னையர்களும் அறிக்கை விடுத்துள்ளனர். ஆனால் எங்கே சிறுவன் டேனியர் ? அவர் இது குறித்து என்ன சொல்கிறார் ? குறிப்பாக கொலம்பியா பல்கலைக்கழகத்துக்குள் சேருவதற்குபோலி ஆவணங்களை காட்டியதாகக் கூறப்படுவதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
மலேசியன்: அது அம்னோ விடுக்கும் அறிக்கையைப் போன்றுள்ளது. மறுப்பதுடன் அரசியல் தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதாக ஊடகங்கள் மீது பழி போடுவது தான் அது. நியூயார்க் போஸ்ட் ஏன் தில்லுமுல்லு செய்ய வேண்டும் ? அதற்கு கஸக்ஸ்தான் எங்கு இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இருக்கலாம்.
ஒடின்: என் ஆங்கில அறிவு குறைவாக இருந்த போதிலும் நீங்கள் உண்மையை சொல்லவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
உங்களுடைய குளறுபடிகளைத் தெரிந்த பின்னர் போலாட் நஸர்பயேவ் உங்களை மண விலக்குச் செய்து விட்டதாக நாங்கள் அறிகிறோம். ஆனால் நீங்கள் உங்கள் அறிக்கையில்,” நானும் என் கணவர் போலாட்-டும் எங்கள் பிள்ளைகள் மீது கடப்பாடு கொண்டுள்ளோம். நாங்கள் இந்த விவகாரத்தைத் தனிப்பட்ட முறையில் தீர்த்துக் கொள்வோம். நாங்கள் எங்கள் பிள்ளைகளைப் பற்றி பெருமை அடைகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
நீங்கள் மணவிலக்குப் பெற்றுள்ள போது நீங்கள் எப்படி அவரை உங்கள் கணவர் எனக் கூறிக் கொள்ள முடியும் ?
நியூயார்க் போஸ்ட் உண்மையில் கதைகளை ஜோடிப்பதாக நீங்கள் நினைத்தால் வழக்குப் போடலாமே ?
அடையாளம் இல்லாதவன்# 6157493148: உலகில் தலை சிறந்த ஜனநாயக நாடு டேனியருக்கு மிகவும்பாதுகாப்பான இடமாகும். இண்டர்போல் என்ற அனைத்துலகப் போலீஸ் அவரைப் பிடிக்கவே முடியாது.
காரணம் அவர் நாட்டுக்குள் நுழைந்ததற்கான பதிவுகள் மாயவித்தை போல காணமால் போய் விடும்.