தீவகற்ப மலேசியா முழுவதும் மாற்றத்திற்கான அலைகள் வீசிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து விடுபட்டு விட வேண்டாம் என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அம்னோவின் தென் கோட்டையான ஜோகூரில் வாழும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
“ஜோகூர் மக்களும் அந்த மாற்றத்தில் எங்களுடன் இணைந்து கொள்வர் என்றும் விடுபட்டு விட மாட்டார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என பத்து பகாட்டில் தொக்கோங் பெச்சாவில் நண்பகல் விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட 500 பேரிடம் ஹாடி கூறினார்.
“கூட்டரசுத் தலைநகரமான புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கு பக்காத்தான் ராக்யாட் தொடங்கியுள்ள போராட்டத்துக்கு இணையாக ஜோகூர் மக்கள் ஜோகூரில் அதிகார மய்யமாகத் திகழும் நூசாஜெயாவை எதிர்த்தரப்புக் கூட்டணி கைப்பற்றுவதற்கு உதவ வேண்டும்,” என்றார் அவர்.