பெர்சே 3.0 பேரணியின் போது எத்தகைய தூண்டுதலும் இல்லாத சூழ்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை போலீஸ் அதிகாரிகள் எனத் தோற்றமளிக்கும் குழு ஒன்று தாக்கும் படத்தை வீடியோ ஒளிப்பதிவு ஒன்றை இணையத்தில் சேர்த்த வீடியோ தயாரிப்பாளரான லினஸ் சுங்-கின் வாக்குமூலத்தைப் போலீசார் இன்று பதிவு செய்தார்கள்.
கோலாலம்பூரில் உள்ள டாங் வாங்கி போலீஸ் மாவட்டத் தலைமையகத்தில் ஏஎஸ்பி சுவா வீ செங் தலைமையிலான குழு அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.
தேர்தல் சீர்திருத்தத்தை வலியுறுத்திய ஏப்ரல் 28 பேரணியின் போது போலீஸ் முரட்டுத்தனம் மீது நடத்தப்படும் விசாரணைக்கு உதவுவதற்காக போலீசார் தமது வாக்குமூலத்தை பெற விரும்பியதாக சுங் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.