கிழக்கில் இன்னும் ஆயுதக்குழுக்கள்: இராணுவப் புலனாய்வுப் பிரிவு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அரசியல் செல்வாக்குடன் பல ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாக இலங்கையின் இராணுவப் புலனாய்வாளர்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த ஆயுதக்குழுக்களில் சுமார் 150 பேர் உள்ளதாகவும், இதில் சுமார் 90 முஸ்லிம்களை கொண்ட பிரிவு ஒன்று செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த சிலர் தனித்து ஆயுதக்குழுவாக செயற்பட்டு வருகின்றனர். அத்துடன் கிழக்கு மகாண முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய ஒரு பிரிவினர் கருணா தலைமையில் ஆயுதக்குழுவாக செயற்பட்டு வருகின்றனர் என்று இலங்கையின் இராணுவ புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இத்தகவல்களின்படி பல முஸ்லிம் குழுக்கள் ஆயுதங்களை கொண்டுள்ள போதும் அவை பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் அளவுக்கு பலத்தை கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: