இலங்கை அகதிகளுக்காக கொக்கோஸ் தீவின் வசதிகள் அதிகரிப்பு

இலங்கையில் இருந்தும் தென்னிந்தியாவில் இருந்தும் வரும் அகதிகளை தங்க வைக்கப்பதற்காக, ஆஸ்திரேலியாவின் பின்தங்கிய தீவான கொக்கோஸ் தீவின் வசதிகளை அதிகரிக்கும் பணிகளில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகள், கிறிஸ்மஸ் தீவுகளுக்கு பதிலாக கொக்கோஸ் தீவை நோக்கியே தமது பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், சலவை இயந்திரங்கள் உட்பட்ட அத்தியாவசிய உபகரண தொகைகள் நேற்று அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கொக்கோஸ் தீவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கடந்த சனிக்கிழமையன்று இலங்கையர்கள் என்று நம்பப்படும் 67 பேர் கொக்கோஸ் தீவை வந்தடைந்ததாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கிறிஸ்மஸ் தீவில் இருந்து மேலதிகமான அகதிகளை கொக்கோஸ் தீவுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் சரக்கு விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

TAGS: