தென்தமிழீழமான மட்டக்களப்பு பகுதிக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது திடீரென அப்பகுதியில் வீசிய பலத்த புயல், அமைச்சர் உரையாற்றிக்கொண்டிருந்த மேடையை பிய்த்துக்கொண்டு சென்றுள்ளது.
இதன் காரணமாக அந்நிகழ்வுக்கு மேடை ஏறி பேச வருகை தந்திருந்த உயர் கல்வி அமைச்சர் உட்பட பிரதி அமைச்சர்களான கருணா என்ற வி. முரளிதரன், ஹிஸ்புல்லா மற்றும் ஏனைய ஆளும் கட்சி அரசியல்வாதிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இறுதிப் போரினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட வடு இன்னும் ஆறவில்லை. அதற்குள் மகிந்த ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு தமிழர் பகுதியில் பிரச்சார கூட்டங்களை நடாத்தி தமிழர்களிடம் ஆதரவு கேட்டு வருகிறது.
நேற்று பிற்பகல் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பராமரிப்பு பீடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவின் போது பலத்த காற்று வீசி அங்கிருந்த மேடை மற்றும் கூடாரங்களை அள்ளிச் சென்று நிகழ்வை தொடர்ந்து நடத்த முடியாதவகையில் இயற்கை சீற்றம் அடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.