“அம்னோ/பிஎன் நமக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்றும் மோசமான செய்கைகளை மறைத்து விடலாம் என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டாம் என்றும் நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றது.”
பக்காத்தான் மூன்று மோசமான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதாக நஜிப் சொல்கிறார்
குழப்பம் இல்லாதவன்: பிரதமருடைய பரிதாபகரமான கபட வேடத்தைக் கண்டு நான் முழுக்க முழுக்க அதிர்ச்சி அடைந்தேன்.
அவருடைய அபத்தத்திற்கு நாம் மயங்கி விடுவோம் என அவர் எண்ணுகிறாரா ? கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட்டனவா ? வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா ? உண்மையா ?
நல்ல செய்கைகள் ? தமது ஊழல் ஆட்சியை மக்கள் தொடர்ந்து ஆதரிப்பதற்காக ரொக்கத்தையும் அன்பளிப்புக்களையும் வழங்கி மக்களை ஏமாற்றுவது தான் அதன் அர்த்தமா ?
அமைதிப் பணியாளன்: பிரதமர் நஜிப் ரசாக் அவர்களே, அம்பாங் எல்ஆர்டி/ ஸ்கார்ப்பின் பேரம் ஆகியவற்றுக்குப் பதில் சொல்லுங்கள். நீங்கள் நல்ல உதாரணத்தை வழங்கின்றீர்களா ?
பக்காத்தான் ராக்யாட் சொல்வது போல இலவசக் கல்வியை கொடுங்களேன் ? மருத்துவக் கவனிப்புக்கான செலவுகள் ஏன் கூடிக் கொண்டே போகின்றன ? தனியார் மருத்துவமனைகள் எப்படி ஆதாயத்தைக் குவிக்கின்றன ?
ரோன் 95 ரகப் பெட்ரோல் விலையை ஏன் குறைக்கக் கூடாது ? பெர்சே 3.0 புரட்சி முயற்சி என நீங்கள் பொய் சொல்லவில்லையா ? பின்புறத்தைக் காட்டும் பயிற்சி மலேசியப் பண்பாடா ? அந்தப் பிரச்னை மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை ?
பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் அவற்றை ஏற்றுக் கொண்டதாகக் கருதப்படும். உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியான், மற்ற முக்கிய ஊடகங்களில் பிரசுரிக்கப்படும் பொய்களை என்னவென்று சொல்வது ?
கேகே சியோங்: பிஎன் -னும் மூன்று மோசமான விஷயங்களை நமக்கு சொல்லிக் கொடுக்கிறது – செக்ஸ், பொய்கள், வீடியோ ஒளி நாடாக்கள்
மலேசியக் குடிமகன்: அம்னோ/பிஎன் நமக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்றும் மோசமான செய்கைகளை மறைத்து விடலாம் என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டாம் என்றும் நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றது.
அடையாளம் இல்லாதவன் #43051382: அந்த மூன்று மோசமான விஷயங்களும் நமக்குப் பழக்கமானதாகத் தோன்றுகிறது. பக்காத்தான் ராக்யாட் அவற்றைப் பின்பற்றவே இல்லை. ஆனால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் அம்னோ பழக்கங்களாக அவை இருந்து வருகின்றன
அம்னோ_NoArm_NoBalls_Frog: அம்னோ ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக் கொடுக்கிறது. அதாவது நீங்கள் ஊழல்வாதியாக இருந்தால் அம்னோ உங்களை ஆதரிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.