“நான் இந்த மனிதரை விரும்புவதற்காக கடந்த இரண்டு மணி நேரமாக யோசித்துப் பார்த்தேன். எதுவும் என் சிந்தனைக்கு எட்டவில்லை.”
‘அவர் ஏன் என்னை இவ்வளவு வெறுக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை’
டாக்டர் ஜக்#04496187: அந்த மனிதருடைய நாடி நரம்புகள். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் விடுக்கும் ஒவ்வொரு அறிக்கையும் அப்பட்டமான பொய்களையும் பாதி உண்மைகளையும் கொண்டவை. வேண்டுமென்றே மறைக்கப்பட்ட விஷயங்களும் அதில் அடங்கும். முழுக்க முழுக்க ஏமாற்று வேலை.
அவரைப் பற்றிய செய்திகள் வெளி வரும் ஒவ்வொரு முறையும் என் உள்ளம் கொதிக்கிறது. உண்மையில் மகாதீர் தத்துவம் என்பதற்கு “பிடிவாதம், துணிச்சல், வர்த்தைகளால் ஏமாற்றுவது, மோசடி, தீயது, முகத் தோற்றம், எரிச்சல், அகங்காரம், கர்வம், பொறாமை, கேரளாக்காரர் என அர்த்தம் சொல்லலாம். ( arrogance’, ‘boldness’, ‘chicanery’, ‘deception’, ‘evil’, ‘facade’, ‘gall’, ‘hubris’, ‘insolence’, ‘jealousy’ and ‘keralite’… (A, B, C, D, E, F, G, H, I, J, K…).
நான் களைப்படைந்து விட்டேன். நான் தொடர முடியும். ஆங்கில மொழியில் உள்ள 26 எழுத்துக்கள் கூடப் போதாது.
அடையாளம் இல்லாதவன்_5fb: மகாதீர் அவர்களே நீங்கள் யாரையாவது வெறுக்க வேண்டுமானால் உங்களையே வெறுத்துக் கொள்ளுங்கள். அது முன்னாள் பிரதமர் பாக் லா-வாகவோ (அப்துல்லா அகமட் படாவி)எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ரஹிமாகவோ டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்-காகவோ இருக்க வேண்டியதில்லை.
இந்த உலகில் ஒரு மில்லியன் மக்களில் நீங்கள் தனித்துவம் பெற்றவர். ஆனால் தவறான காரணத்துக்காக. Memang Malaysia tak bernasib baik ada insan semacam engkau. Diam diamlah jikalau tak mau bertaubat.
அது இருக்கட்டும் மகாதீர் அவர்களே நீங்கள் ஏன் பாக் லா-வை வெறுக்கின்றீர்கள் ? அன்வாரை சிறைச்சாலையிலிருந்து விடுவித்ததற்காக அல்லது உங்கள் திட்டத்தை (கோணலான பாலத்தை) நிறுத்தியதற்கா ? அல்லது உங்களிடமிருந்து உத்தரவைப் பெறுவதற்கு பாக் லா மறுத்ததற்கா ?
உங்கள் வாரிசாக பாக் லா-வை தவறுதலாக நியமித்து விட்டதற்காக நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம். ஆகவே நீங்கள் உங்களையே குறை சொல்லிக் கொள்ளுங்கள்.
பெர்ட் தான்: “அவர் ஏன் எங்களை இவ்வளவு வெறுக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை” என மகாதீர் சொல்கிறார். மகாதீருடைய பிரிவினைவாத இனவாத அரசியலை டிஏபி தலைவர் சாடியது குறித்து கருத்து தெரிவித்த போது மகாதீர் அவ்வாறு சொன்னார்.
ஒர் அரசியல்வாதியைப் போன்று பதில் சொல்லாமல் மகாதீர் தனிப்பட்ட ரீதியில் அதனை எடுத்துக் கொண்டு பதில் சொல்கிறார்.
எந்த ஒரு முதிய அரசியல்வாதியும் அதனைச் சொல்லியிருந்தால் அவர் முதுமை காரணமாக அவர் அதனை சொல்லியிருக்கலாம் எனக் கருத முடியும். ஆனால் மகாதீரை அப்படி ஒதுக்க முடியாது. அவர் தந்திரக்காரர். ஏமாற்று வேலைகளில் வல்லவர். அவருடைய வினோதமான அழுகுரலுக்கு அனுதாபம் கிடைக்கலாம். ஆனால் அவருடைய நுட்பமான இனவாதம் அதனைத் தடுத்து விடும்.
கிட் சியாங் அவருடைய பகைவர் அல்ல. அன்வார் எதிரி ஆவார். ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் எதுவும் பேசுவதில்லை. சீனரான டிஏபி தலைவர் முன்னாள் பிரதமரும் மலாய்க்காரருமான தம்மை இடைவிடாமல் தாக்குகிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு மகாதீர் முயலுகிறார்.
உண்மையானவன்: பெர்ட் தான். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். மலாய் சிந்தனையை மகாதீர் நன்கு புரிந்து கொண்டுள்ளார். அதனை முழு அளவுக்கு அதனை அவர் பயன்படுத்துகிறார். பெர்க்காசா விரைவில் தனது புரவலருக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கலாம். வியப்படைய வேண்டாம்.
குவீனி: “நான் இந்த மனிதரை விரும்புவதற்காக கடந்த இரண்டு மணி நேரமாக யோசித்துப் பார்த்தேன். எதுவும் என் சிந்தனைக்கு எட்டவில்லை.” நண்பர்களே எனக்கு உதவுங்கள்.