தமிழக மீனவர்களுக்கு 20 ஆண்டு சிறை; ‘கடல் கொள்ளையர்’ என பட்டம் சூட்டும் ராஜபக்சே!

இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழையும் தமிழக மீனவர்களைத் தண்டிப்பதற்குப் புதிய உத்திகளைக் கையாளும் இலங்கை அரசு, தற்போது மேலும் புதிதாக ‘கடல் கொள்ளையர்’ பட்டத்தையும் வழங்கி 20 ஆண்டு சிறை என்ற தண்டனையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு கடந்த ஜூன் 20 அன்று ரியோ டி ஜெனிரோவில் நடந்தது. இந்த மாநாட்டில் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சே;

இந்திய மீனவர்கள் இலங்கையின் வடக்கே உள்ள கடல் பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்து வருகிறார்கள். இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்வளத்தையும் அரிய கடல் செல்வங்களையும் கொள்ளையடித்துச் செல்கிறார்கள். இதனால் இலங்கையின் கடல் எல்லை பிரச்சினைக்குரிய பகுதியாக இருக்கிறது.

எனவே, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறுபவர்கள் மீது அனைத்துலக கடல் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வீரம் பேசியுள்ளார் ராஜபக்சே.

தமிழக மீனவர்​களைப் பிடித்து சுமார் 20 ஆண்டுகள் சிறையில் தள்ளுவதற்கான திட்டமாகவே இலங்கை அதிபரின் பேச்சு அமைந்துள்ளதாக தமிழக மீனவர்கள் வர்ணிக்கின்றனர்.

TAGS: