“இதை விட நல்ல விஷயம் இல்லை- அம்னோவும் மசீச-வும் வெளிப்படையாக மோதிக் கொள்வது-பிஎன் முடிவுக்கான தொடக்கம் என்பது நிச்சயம்.”
துணைப் பிரதமரும் மசீச-வும் வாக்குவாதம்
உங்கள் அடிச்சுவட்டில்: துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் மசீச-வும் “மாட்டுத் தலைகளை தொங்க விடுகின்றன- ஆனால் விற்பது நாய் இறைச்சி (சீனப் பழமொழி).
மலாய்க்காரர்களுடைய பிரச்னைகளை துணைப் பிரதமர் புரிந்து கொண்டுள்ளார் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ? அவர் அறிந்திருந்தால் நாடாளுமன்றத் தொகுதிகளில் பாதி பாஸ் கட்சிக்கும் பிகேஆர் கட்சிக்கும் சென்றிருக்காது.
சீனர்களுடைய பிரச்னைகளைத் தீர்ப்பதில் மசீச உண்மையில் அக்கறை கொண்டுள்ளது என்பதை நீங்கள் நம்புகின்றீர்களா ? அந்தக் கட்சியில் வர்த்தகமும் சுய நலனுமே முதலிடத்தைப் பெறுவது கோமாளிகளுக்குக் கூடத் தெரியும்.
மக்கள் உணர்வுகளை மதிப்பீடு செய்வதாக ஏன் அடிக்கடி அரசியல் தலைவர்களும் எம்பி-க்களும் சொல்கின்றனர் ? மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வதாக அவர்கள் ஏன் சொல்கின்றனர் ?
அவர்கள் கிராமங்களுக்குச் சென்று அரிசி மூட்டைகளையும் மேக்கி மீ பொட்டலங்களையும் விநியோகம் செய்கின்றனர். அவர்களிடம் 1Taxi, 1Menu, 1Kedai, BR1M என வகை வகையாக உள்ளன. ஆனால் முக்கியமான விஷயத்தை அவர்கள் மறந்து விடுகின்றனர்.
அவை என்ன என்பதை உங்கள் ஆய்வுக்கு விட்டு விடுகிறேன்.
ஸ்டார்ர்: மசீச சீன உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை. முஹைடின் மலாய்க்காரர்களைப் பற்றி மட்டுமே எண்ணுகிறார். பிஎன் அரசாங்கத்தின் தோல்விக்கு அவையே உண்மையான காரணங்கள்.
மூன் டைம்: உசுப்பி விடப்பட்டுள்ளனர். தயவு செய்து தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபடுங்கள். அனைவரும் பார்க்கும் வகையில் பலவீனங்களைப் பகிரங்கமாக பேசிக் கொள்ளுங்கள். இன அடிப்படை அரசியல் இனிமேலும் ஒத்து வராது என்பதை அம்னோவும் மசீச-வும் இன்னேரம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் அதனை உணருவதற்கு அவற்றுக்கு வெகு காலம் பிடித்துள்ளது. அதுவும் அடுத்த பொதுத் தேர்தலில் பெரிய அளவில் தோல்வி காணக் கூடிய மருட்டல் ஏற்பட்டுள்ள போது தான் அவை உணர்ந்துள்ளன.
நியாயமானவன்: இதை விட நல்ல விஷயம் இல்லை- அம்னோவும் மசீச-வும் வெளிப்படையாக மோதிக் கொள்வது-பிஎன் முடிவுக்கான தொடக்கம் என்பது நிச்சயம்.
அடையாளம் இல்லாதவன்#19098644: நீண்ட காலமாக மசீச-வும் மஇகா-வும் அம்னோவுக்கு சேவகர்களாக இருந்து வந்துள்ளன. அதனால் துண்டுகள் மட்டுமே அவற்றுக்குக் கிடைத்ததாக முன்னாள் மசீச தலைவர் ஒங் தீ கியாட் கூறியுள்ளார்.
55 ஆண்டுகளாக ஊழல் மலிந்த அம்னோ குண்டர்களுக்கு சேவகம் செய்து சீனர்களை தவறாக வழி நடத்திய மசீச கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தாங்கள் சமமாகவும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என சீனர்களும் இந்தியர்களும் கடாஸான்களும் இபான்களும் மற்ற இனங்களும் விரும்புவதாக இப்போது தான் மசீச துணைத் தலைவர் லியாவ் தியோங் லாய்க்குத் தெரிந்துள்ளது.
ஜியூடைஸ்: “சீனர்களுக்கு நியாயமில்லாத கொள்கைகள் படிப்படியாக சரி செய்யப்படுகின்றன” இந்த ஒரு விஷயமே போதும் கடந்த 50 ஆண்டுகளாக மசீச எதுவும் செய்யவில்லை என்பதைக் காட்டுவதற்கு. அந்தக் கொள்கைகள் அமலாக்கப்படுவதற்கு ஏன் முதலில் அது அனுமதித்தது ?
அதற்கான பதில்: மசீச சொந்த நலனில் மட்டுமே அக்கறை கொண்டிருந்தது. சீன சமூக நலன்களில் அல்ல.
அடையாளம் இல்லாதவன்: தம்மை மலேசியர் என இரண்டவதாகக் கருதும் ஒருவருடைய கபடமான வார்த்தைகளே அவை.
அவர் ஏன் மசீச மீது நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறார். தான் ஒரம் கட்டப்படுவதற்கு தன்னை அது வெகு காலம் அனுமதித்து விட்டது. அதனை சீன சமூகமும் புறக்கணித்து விட்டது.
கிள்ளான் பையன்: துரதிர்ஷ்டவசமாக இருவர் சொல்வதும் சரியே .