போர்க்குற்றவாளியை துணைத்தூதராக ஏற்றுக்கொள்ள சுவிஸ், ஜெர்மனி மறுப்பு

இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள இராணுவ அதிகாரியும் போர்க்குற்றவாளியுமான ஜகத் டயஸை துணைத் தூதராக ஏற்றுக்கொள்ள சுவிற்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் மறுப்பத் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் மடுவேகெதர தொடர்ந்தும் பதவியை வகித்து வருகின்றார். இவரின் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதம் மடுவேகெதரவின் முடிவடைந்திருந்தது.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் தூதுவர் மற்றும் துணைத் தூதுவர் பதவியை வழங்க முடியாது எனவும் சுவிற்சர்லாந்து அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வமாக சுவிற்சர்லாந்து அரசாங்கம் இராஜதந்திர வழிமுறைகளைப் பயன்படுத்தி எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, தமக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை என ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அரச தொலைக்காட்சி சேவையின் முன்னாள் தலைவரான சரத் கொஹங்காகே ஜெர்மனிக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

TAGS: