தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான சின்னத்தம்பி பத்மநாதன் என்பவர் இலங்கை அனைத்துலக விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கர்ணல் ரமணனுடன் இணைந்து பத்மநாதன் செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாடு சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்த பத்மநாதன் இரகசியமான முறையில் இலங்கைக்குள் உள் நுழைய முற்பட்ட போது இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.
போர் காலங்களின்போது இலங்கையின் கிழக்கு மகாணம் மற்றும் தலைநகர் கொழும்பு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பங்களில் பத்மநாதனுக்கு தொடர்புள்ளதாக இலங்கை காவல்துறை வட்டாரம் கூறுகிறது.
இத்தாக்குதல் சம்பங்களின் குற்றச்சாட்டின் பேரில் பத்தமநாதன் 1999-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2002-ஆம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.