எம்பி: சபாஷின் அன்றாட நடவடிக்கைகளை நிபுணர் குழு கண்காணிக்கும்

சிலாங்கூர்,அம்மாநிலத்தில் நீர்விநியோகம் செய்ய உரிமை பெற்றுள்ள ஷியாரிக்காட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரின்(சபாஷ்) அன்றாட நடவடிக்கைகளைக் கவனிக்க நிபுணர் குழு ஒன்றை அமைக்கும்.

இன்று காலை மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்துக்குப் பின் இம்முடிவை  அறிவித்த மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அக்கூட்டத்தில் எழுப்பப்பட்ட பல விவகாரங்களுக்கு சபாஷ் “விவரமான, திருப்திகரமான விளக்கமளிக்கத் தவறிவிட்டது” என்றார்.

நிபுணர் குழுவில் கும்புலான் டாருல் ஈசான் பெர்ஹாட் தலைமை செயல் அதிகாரி சுஹாய்மி கமருஸாமான், கொன்சோர்டியம் அபாஸ் சென்.பெர்ஹாட் இயக்குனர் அபாஸ் அப்துல்லா, கும்புலான் பெராங்சாங் சிலாங்கூர் பொது நிர்வாகி (தண்ணீர் நிர்வாகம்) கரிம் எண்டுட், பெராங்சான் சிலாங்கூர் திட்டமிடல், வியூக, முதலீட்டுப் பிரிவுத் தலைவர் கெவின் லீ ஆகியோர் இடம்பெற்றிருப்பர்.

 

TAGS: