“வழக்கம் போல பழைய பாணியில் ஒர் அச்சுறுத்தல்: உங்கள் படுக்கைக்கு கீழே சிவப்புச் சட்டைக்காரர்கள். இப்போது வேடிக்கைக்காக ஜிஹாட் போராட்டக்காரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.”
போலீஸ் சிறப்புப் பிரிவு: கம்யூனிஸ்ட்களும் ஜெம்மா இஸ்லாமியா உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளுக்குள் ஊடுருருவுகின்றனர்
உங்கள் அடிச்சுவட்டில்: கம்யூனிஸ்ட்களும் ஜெம்மா இஸ்லாமியா உறுப்பினர்களும் என்றாவது ஒரு நாள்ஆட்சியைக் கைப்பற்றும் பொருட்டு பக்காத்தான் ராக்யாட் அரசியல்வாதிகளில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர் என்றால் உண்மையில் அவர்கள் கோமாளிகளாக இருக்க வேண்டும்.
அவர்கள் இப்போது அதிகாரத்தில் இருக்கும் பிஎன் மீது அக்கறை காட்டவில்லையா ? ஒரு வேளை கம்யூனிஸ்ட்கள்/ஜெம்மா இஸ்லாமியா உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் பிஎன் விழுந்து விட்டதோ என்னவோ ?
ஒரு வேளை அடுத்த தேர்தலில் பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது என்பதால் இப்போது அவர்கள் பக்காத்தானுக்குள் ஊடுருவி விட்டனரோ என்னவோ ?
முகமட் சோபியான் முகமட் மாக்கினுதின் போன்ற அதிகாரிகள் இருந்தால் சிறப்புப் பிரிவினருக்கு நமது அரசியல் கட்சிகளுக்குள் கம்யூனிஸ்ட்களும் ஜெம்மா இஸ்லாமியா உறுப்பினர்களும் நுழைந்துள்ளது தெரியாமல் போய் விடும்.
முன்னாள்wfw: இந்த நாட்டுக்கு வழங்குவதற்கு ஒன்றுமில்லை என்பதை பெரும்பாலான மலேசியர்கள் முடிவு செய்துள்ளதை இன்னேரம் அதிகார வர்க்கத்தினர் உணர்ந்திருக்க வேண்டும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி- 30 ஆண்டு காலத்திற்கு முந்திய வழி முறையைப் பின்பற்றுவது மட்டும் தான்.
சட்ட விரிவுரையாளர் சொல்வதைப் போல நிறைய அனுபவம் உள்ள பிஎன் எதிர்த்தரப்பில் அமர்ந்தால் அடுத்த அரசாங்கம் ஊழல் செய்தால் அதனை எளிதாக கண்டு பிடித்து விடலாம்.
ஏஸ்: இது போன்ற சின்ன மூளைகளைக் கொண்டவர்களுடைய முடிவுகளும் கருத்துக்களும் மலேசியர்கள் அரச மலேசியைப் போலீஸ் படை மீது நம்பிக்கை இழக்கச் செய்துள்ளன.
ஏற்கனவே கம்யூனிசம் 98 விழுக்காடு அஸ்தமித்து விட்டது. அதனால் சிறப்புப் பிரிவின் முகமட் சோபியான் யாரை பயமுறுத்த முயலுகிறார். சீனா, ரஷ்யா, வியட்னாம், போன்ற மூத்த கம்யூனிஸ்ட் நாடுகள் நம்மைக் காட்டிலும் இப்போது பெரிய முதலாளித்துவாதிகளாக மாறி விட்டன.
மலேசிய இனம்: அம்னோ எஜமானர்களுக்கு தாங்கள் விசுவாசமாக இருப்பதைப் போலீசார் மெய்பித்துள்ளனர். கம்யூனிஸ்ட்களும் ஜெம்மா இஸ்லாமியா உறுப்பினர்களும் ஊடுருவியிருப்பதாகச் சொல்வது ஜோடிக்கப்பட்ட கதையாகவும் இருக்கலாம். ஏனெனில் டாக்டர் மகாதீர் முகமட் நடத்திய லாலாங் நடவடிக்கையை மீண்டும் நடத்த அம்னோ விரும்பினால் அது உதவியாக இருக்கும்.
குழப்பம் இல்லாதவன்: அரச மலேசியப் போலீஸ் படையின் நீல நிற சீருடையில் மறைந்துள்ள வெறி பிடித்தஇன்னொரு அம்னோ பக்தருடைய அறிக்கையே அது. அந்த தந்திரம் உண்மையில் பரிதாபமாக இருக்கிறது.
கம்யூனிஸ்ட்கள் ஜெம்மா இஸ்லாமியா உறுப்பினர்கள் பற்றி அவர் விடுக்கும் அறிக்கைகளுக்கு நாம் மயங்கி விடுவோம் என அந்த முட்டாள் எண்ணுகிறாரா ? ஒவ்வொரு படுக்கைக்குக் கீழே சிவப்புச் சட்டைக்காரர் இருப்பதாக செனட்டர் மெக்கார்த்தி சொல்வதை அவர் வேதவாக்காக எடுத்துக் கொண்டாரோ என்னவோ ? அதை நினைத்தால் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை.
ஹாங் பாயூப்: வழக்கம் போல பழைய பாணியில் ஒர் அச்சுறுத்தல்: உங்கள் படுக்கைக்கு கீழே சிவப்புச்சட்டைக்காரர்கள். இப்போது வேடிக்கைக்காக ஜிஹாட் போராட்டக்காரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.