அரசாங்கம் இவ்வாண்டுக்கான மெர்டேகா கொண்டாட்ட கருப்பொருளை ஒரு வாரத்துக்குள் மாற்றியாக வேண்டும், தவறினால் பக்காத்தான் ரக்யாட் ’எல்லாரையும் அரவணைத்துச் செல்லும்’ மாற்றுக் கருப்பொருள் ஒன்றை முன்மொழியும்.
“கருப்பொருள் நாடு மொத்தத்துக்கும் பொருத்தமுடையதாக இருக்க வேண்டும்.‘Janji Ditepati’ (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) என்பது பிஎன் சுலோகம்.
“பிஎன் சுலோகத்தை எப்படி மெர்டேகா கொண்ட்டாட்ட கருப்பொருளாக பயன்படுத்த முடியும்?அது அநியாயம்”, என்று பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி(வலம்) கூறினார்.அவர் இன்று பக்காத்தான் ரக்யாட் தலைமைச் செயலாளர்களின் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.